25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல்களுக்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது

மக்களவை பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெற்றது. 28.03.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, 30.03.2024  அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு  சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1,60,107 ஆண்கள், 1,65,332 பெண்கள், 37 இதர வாக்காளர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,35,309 ஆண்கள், 1,43,271 பெண்கள், 13 இதர வாக்காளர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,699 ஆண்கள், 1,18,559 பெண்கள், 59 இதர வாக்காளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,13,988 ஆண்கள் 1,19,121 பெண்கள், 28 இதர வாக்காளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,06,097 ஆண்கள் 1,11,158 பெண்கள், 46 இதர வாக்காளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,05,017 ஆண்கள் 1,11,079 பெண்கள், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 7,33,217 ஆண்கள், 7,68,520 பெண்கள், 205 இதர வாக்களர்கள் என ஆக மொத்தம் 15,48,825 வாக்களர்கள் உள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 148 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண்பார்வையாளர்களும், கூடுதலாக 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 வாக்குபதிவு  பணிக்காக 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1460 வாக்குச்சாவடி அலுவலர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1492 வாக்குச்சாவடி அலுவலர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1380 வாக்குச்சாவடி அலுவலர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1350 வாக்குச்சாவடி அலுவலர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1262 வாக்குச்சாவடி அலுவலர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1243 வாக்குச்சாவடி அலுவலர்களும், என மொத்தம் 8187 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4066 வாக்குபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 156 மண்டல குழுக்களும், 54 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 6 வீடியோ கிராபர்களும்,  6  வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 6 கணக்கு குழுக்களும் பணியில் உள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL  என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், பணம்  மற்றும் பரிசு பொருட்கள் பெறாமல்  நேர்மையான முறையில் 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News