விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. BT பருத்தி, SURAJ , SURABI , SVPR-2, SVPR-4 மற்றும் RCH போன்ற ரகங்கள் அதிகளவில் விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம், இழையின் நுண்மைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து முகாம் நடத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு நியாயமான சராசரி தரக்காரணிகளான (FAQ) ஈரப்பதம் 8 சதவிதத்திற்கு மிகாமலும் பருத்தி இழையானது 29.0 மில்லிக்கு கூடுதலாகவும் பழுப்பு மற்றும் சருகு இல்லாத பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் Cotton Corporation of India நிறுவனம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளை வணிகர்களுடன் ஒருங்கிணைத்து, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தினார்.விருதுநகர் மாவட்ட பருத்தி விவசாய பெருமக்கள் பயன்பெற விருதுநகர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 93600-87561 என்ற அலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் விறப்னைக்கூடகண்காணிப்பாளரை 82484-05989 என்ற அலைபேசி எண்ணிலும், சாத்தூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90033-56172 என்ற அலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 79045-37699 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையில் வாகனம் TN 67 G 0621, அம்பாசிடர் கார் 18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் காலை 11.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து பகிரங்க பொது ஏலம் விடப்படுகிறது.நிபந்தனைகள் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத் தொகை ரூ.5000/- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலையாக (Demand Draft) Regional Director of Animal Husbandry, Virudhunagar என்ற பெயரில் எடுக்க வேண்டும். காலை 11.00 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணை வரைவோலை (Demand Draft) மீள வழங்கப்படும். இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கோ ஏலத்தை ஒத்தி வைக்கவோ ஏலத்தை முடித்து வைப்பதற்கோ மண்டல இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் ஏலத் தொகையுடன் புளுவு GST 18% (9% + 9%) சேர்த்து செலுத்தி வாகனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட்டு தேவையான விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2025-2026) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 425- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 182- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.336- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.386- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.419- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1573- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.4426- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2025 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2025 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் வெங்காயம் பயிருக்கு 01.09.2025 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ.சுகபுத்ரா ., I A S. அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (05.07 2025) குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவைகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (05.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டறிந்தார்.
சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாத்தூர் நிலையத்திற்கு நேரில் வந்து பயிற்சியில் சேர தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் இருபாலரும் (ஆண் / பெண்) 31.07.2025 முடிய விண்ணப்பம் செய்யலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். ஏற்கனவே B.SC., Diploma, B.E., கல்வியில் சேர்ந்து கல்வியினை தொடர இயலாதவர்களும் திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொறிப்பகுதி பொருத்துநர் (FITTER) மின்சார பணியாளர் (ELECTRICIAN) கம்மியர் மோட்டார் வண்டி (MMV) சூரிய மின்சக்தி தொழில்நுட்பவியலாளர் (எலக்ட்ரிக்கல்)(SOLAR TECHNICIAN (ELECTRICAL) மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (FIRE TECHNOLOGY & INDUSTRIAL SAFETY MANAGEMENT) மற்றும் Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற் நுட்பங்களுடன் கூடிய தொழிற் பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Industrial Robotics & Digital Manufacturing) ( Manufacturing Process control & Automation ) இப்பிரிவுகளில் சேருவதற்கு 10-ம் வகுப்புதேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற் பயிற்சி நிலயங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்துபயணச் சலுகை /அனைவருக்கும் மாதாந்திர கல்விஉதவித் தொகைரூ.750/- (வருகைக்குஏற்ப) /சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) /மூடு காலணி 1 செட் /பாடப்புத்தகங்கள் /வரைபடகருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண்/ பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- கூடுதல் உதவித்தொகை. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர் நிலையத்தில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ் / பள்ளிமாற்றுச் சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம். நேரடி சேர்க்கைக்கு கடைசி தேதி 31.07.2025 என தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் சாத்தூர் 4562-290953, 94990-55823, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண். 92 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3)) துறை நாள்.26.06.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும்பட்சத்தில் அரசு கடிதம் குறிப்பிடப்பட்டுள்ள.15535/5.1.4(3)/2019 நாள் 18.02.2020-அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in ல் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (04.07.2025) மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் வெடிவிபத்தினை தடுப்பது குறித்த வழிமுறைகளான அனுமதிக்கப்பட்ட அளவில் இரசாயன வேதிப்பொருட்களை கையாள்வது, ஒவ்வொரு உற்பத்தி அறை, வேதிப்பொருட்கள் கலவை மற்றும் நிரப்புதல் அறைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது குறித்தம், பாதுகாப்பாக மணி மருந்து கையாளுதல்; குறித்தம், உள்குத்தகை விடுவதை தடுப்பது குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும், பட்டாசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்; அறிவுரை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள், மற்றும் இணை இயக்குநர் பயிற்சி மையம்) சிவகாசி வெடிப்பொருள் கட்டுபாட்டு துறை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தீயணைப்பு அலுவலர், தனி வட்டாச்சியர் (தீ.தொ.ஆ) மற்றும் டான்பாமா, டிப்மா, சிப்மா, டாப்மா, சிறு,குறு பட்டாசு உற்பத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆம் நிதியாண்டியில் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தாரரின் தகுதிகள் பின்வருமாறு:விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டம் சிறு வார்த்தகம் ஃ வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ஆண்டு வட்டி விகிதம் ரூ1.25 இலட்சம் வரை 7 சதவிதம் மற்றும் ரூ1.25 இலட்சம் முதல் ரூ15 இலட்சம் வரை 8 சதவிதம் கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.குழுக்கடன் திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில்ஃவணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7 சதவிதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3ஆண்டுகள். சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள! பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவரர்(மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000- வீதம் 2 கறவைமாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவிதம், திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி சான்று, வருமான சான்றுஇ பிறப்பிடச் சான்றுஇ குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்இ ஆதார் அட்டைஇ வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 40 குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும்,ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும்,பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சியில் 12 ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காதற்கான காரணங்கள், குடும்ப சூழ்நிலைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உயர்கல்வி பயில வலியுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து, டி.கடம்பங்குளம் ஊராட்சியில், சிறு பாசன குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.9.85 இலட்சம் மதிப்பில் தொடுவன்பட்டி கண்மாய் தூர்வாரப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கம்பிக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.9.12 இலட்சம் மதிப்பில், வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையில் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், கம்பிக்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருவதையும்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுகேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், முடுக்கன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிற்றல், கற்றல் திறன், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.