25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில்  (04.07.2025)  மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் வெடிவிபத்தினை தடுப்பது குறித்த வழிமுறைகளான அனுமதிக்கப்பட்ட அளவில் இரசாயன வேதிப்பொருட்களை கையாள்வது, ஒவ்வொரு உற்பத்தி அறை, வேதிப்பொருட்கள் கலவை மற்றும் நிரப்புதல் அறைகளில்  அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது குறித்தம், பாதுகாப்பாக மணி மருந்து கையாளுதல்; குறித்தம், உள்குத்தகை விடுவதை தடுப்பது குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும்,  பட்டாசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்; அறிவுரை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள், மற்றும் இணை இயக்குநர் பயிற்சி மையம்) சிவகாசி வெடிப்பொருள் கட்டுபாட்டு துறை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தீயணைப்பு அலுவலர், தனி வட்டாச்சியர் (தீ.தொ.ஆ) மற்றும் டான்பாமா, டிப்மா, சிப்மா, டாப்மா, சிறு,குறு பட்டாசு உற்பத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News