மாதங்களில் மார்கழி மாத சிறப்புகள்
மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. அதேபோல் மார்கழி மாதத்தில் புதுமனை குடிபுகுதல் ,வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறுதல் ,புதிய அலுவலக கட்டிடத்திற்கு மாறுதல் போன்றவை செய்யக்கூடாது இதற்கு காரணம் இம்மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்யத்தை இழந்தார் என்று கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆக்ஸிஜன் அதிகமாக இருப்பதால் சூரிய உதயத்திற்கு பின் தூங்கக் கூடாது. அதிகாலையிலே எழுந்திருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.நிச்சயதார்த்தம், காது குத்துதல், பத்திரப்பதிவு, வாகன பதிவு செய்தல் மற்றும் வாங்குதல் கூடாது.
0
Leave a Reply