இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, சோர்வை நீக்கி ,செரிமானத்தை அதிகரிக்கிறது கோவக்காய்.
கோவக்காயில்பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, இதய நோயை தடுக்கிறது.
இரும்புச்சத்து உடல் இயங்குவதற்கு தேவையான ஒரு சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. சோர்வை நீக்குகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால்அனீமியா ஏற்படுகிறது. கோவக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது கிடைக்கும் இரும்புச்சத்து உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கோவக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. கடினமான மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல், அல்சர் போன்ற வயிறு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் கேவக்காய் சரிசெய்கிறது.
0
Leave a Reply