அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி உற்சவம்
(11.10.2026 - 20.10.2026)
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் புரட்டாசி மாதம் 24-ம் தேதி (11-10-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 03-ம் தேதி (20-10-2026) செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் மன அமைதியும், வளமும், நலமும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.
11.10.2026 ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீ ராஜராஜேச்வரீ - மங்கள இசை
12.10.2026 திங்கள்கிழமை - ஸ்ரீ மீனாக்ஷி - ஸ்ரீமதி ராதிகா அவர்களின் மாணவிகள் வழங்கும் வாய்ப்பாட்டு
13.10.2026 செவ்வாய்க்கிழமை - ஸ்ரீ அன்னபூர்ணா - ஸ்ரீமதி ஐஸ்வர்யா அவர்களின் மாணவியர் வழங்கும் பரதநாட்டியம்
14.10.2026 புதன்கிழமை - ஸ்ரீ தான்யலக்ஷ்மீ - ஸ்ரீ அன்னப்பராஜா அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் கீபோர்டு
15.10.2026 வியாழக்கிழமை - அனந்தசயனம் - ஸ்ரீ கோகுல்நாத் அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் வாய்ப்பாட்டு & மிருதங்கம்
16.10.2026 வெள்ளிக்கிழமை - ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ரூபிணி - ஸ்ரீ P.M.பாலு அவர்களின் மாணவியர் வழங்கும் வாய்ப்பாட்டு
17.10.2026 சனிக்கிழமை - ஸ்ரீ துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதி - ஸ்ரீ முருகன் அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் வயலின் & வாய்ப்பாட்டு
18.10.2026 ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி - துர்க்காஷ்டமி
19.10.2026 திங்கள்கிழமை (சரஸ்வதீ பூஜை) - ஸ்ரீ சிவபூஜா ரூபிணி - முனைவர் S.B.பத்மசங்கர் அவர்களின் மாணவியர் வழங்கும் வீணை
20.10.2026 செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) - ஸ்ரீ மீனாக்ஷி கல்யாண அலங்காரம் - வாழும் கலைக் குழுவினர், இராஜபாளையம்.
.......
அக்ஷராப்யாஸம்
"ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ! வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா"!!
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 03-ம் தேதி (20-10-2026) விஜயதசமி நன்னாளாகிய செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் நமது திருக்கோவிலில் அமைந்துள்ள வித்யாஸரஸ்வதி சந்நிதிக்கு முன்பாக அக்ஷராப்யாஸம் சிறப்பாக நடைபெற உள்ளது.
அக்ஷராப்யாஸம் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகள் தாம்பாளம்,. வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உதிரிபுஷ்பம், சரம், பச்சரிசி மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றுடன் காலை 6.00 மணிக்குள் கொண்டு வந்து வித்யாஸரஸ்வதியின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
..........
குறிப்பு:
நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.00-9.00 மணி வரை ஸப்தஸதீ பாராயணம் நடைபெற உள்ளது.
மாலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.
ஸப்தஸதீ பாராயண ஸங்கல்பத்திற்கு நாளொன்றுக்கு ரூ 1000/-.
இத்திருக்கோவிலில் 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை துர்க்காஷ்டமி அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜையில் பங்கு கொண்டு அனைத்து நலங்களும் பெற்றுய்ய கேட்டுக்கொள்கிறோம்.
துர்க்காஷ்டமியன்று திருவிளக்கு பூஜை செய்வது சிறந்த பலனைத்தரும்.
திருவிளக்கு பூஜை கட்டணம் ரூ 25/-.
நவராத்திரி பூஜை கட்டளைதாரராக விரும்புபவர்கள் ரூ 3000/-
நன்கொடையளித்து திருக்கோவிலில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில்
அர்ச்சகருடன் அல்லது 9003273690
என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).
இப்படிக்கு "குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.
0
Leave a Reply