விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அனுதிக்காக காத்திருக்கின்றனர்.
விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம்
விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரை 130 கிலோ மீட்டர் தூர அகல ரயில்பாதை மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்குவதற்கு வசதியாக மின்மயமாக்கப்பட்டுள்ளது.இதற்காக இராஜபாளையம் அருகே சோழாபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் துணை செக்சன் பூஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது ரயில்கள் இயக்கத்திற்க தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும்.மின்மயமாக்கல் பணிகள் முடிந்த நிலையில் மார்ச் 29ல் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அதிவேக ரயில் சோதனை நடத்தினர், ஆய்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அக்டோபர் 1 முதல் இவ்வழித்தடத்தில் மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை.விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அனுதிக்காக காத்திருக்கின்றனர்..
விவசாயிகளக்கு விழிப்புணர்வு கூட்டம்
தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளை புலிகள் சரணாலயத்துடன் அரசு இணைந்துள்ளது. இந்நிலையில் மலையை ஒட்டியுள்ள வடக்கு வெங்காநல்லூர் அயன் கொல்லங்கொண்டான் 2, திருச்சாலூர், சோமையாபுரம், மாலையாபுரம், சம்மந்தபுரம், மேலப்பாட்டக்கரிசல்குளம் பகுதிகள் உள்ளிட்ட வனத்துறை கிராமங்களில் உள்ள விவசாய பட்டா நிலங்களில் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு எந்த வித மரம் மற்றம் விறகுகளையும் வெட்டுவதற்கு அனுமதி கிடையாது,இராஜபாளையம் தாலுகா அலுவலத்தில் மலையை ஒட்டிய கிராமங்களின் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்க முறையான அனுமதி பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது..
0
Leave a Reply