25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Oct 30, 2025

சூப்பர் சிங்கர் பூவையார் ஹீரோவாக நடிக்கும் படம்'ராம் அப்துல்லா ஆண்டனி'

சூப்பர் சிங்கர் பூவையார் ஹீரோவாக நடிக்கும் 'ராம் அப்துல்லா ஆண்டனி' படம் அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வேல ராமமூர்த்தி, தலை வாசல் விஜய்,சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி , வைத்தியநாதன் ,வனிதா உள்பட பலர் நடிந்துள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

Oct 30, 2025

விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' படத்தில்'கண்ணுார் ஸ்குவாட்' மலையாள படத்தின் இன்ஸ்பிரேஷன்.

அக்., 31ல் விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' படம் ரிலீசாகிறது. விஷ்ணு விஷால் இதில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணுார் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியும், 4 பேர் கொண்ட குழுவும் பல மாநிலங்களுக்கு சென்று குற்றவாளியை பிடிப்பது தான் கண்ணுார் ஸ்குவாட் கதை.

Oct 30, 2025

'காந்தாரா சாப்டர் 1' பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டியின் ஆன்மிக பயணம் .

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலகளவில் ரூ.818 கோடி வசூலித்துள்ளது. 2025ல் இந்திய படங்களில் அதிகம் வசூல் செய்ததாக இப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து ஆன் மிக பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து நஞ்சனகுடு கண்டேஸ்வரர் கோயில், தக்ஷன காசி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சென்ற ரிஷப், பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றும் தரிசனம் செய்துள்ளார்.

Oct 30, 2025

ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் நடிகர் மாதவனின் தோற்றம்.

'ஜிடிஎன்' என்ற படம் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க அவரது ரோலில் நடிக்கும்மாதவனின்தோற்றத்தைவெளியிட்டுள்ளனர்.இந்தலுக்கிற்காகமாதவன்இரண்டரைமணிநேரம் மேக்கப்போட்டுள்ளார் .அடுத்தாண்டு கோடையில் படத்தை ரிலீஸ் 'செய்ய எண்ணி உள்ளனர்.

Oct 30, 2025

பிரபாஸ் நடிக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிகை காஞ்சனா.

நடிகர் பிரபாஸ் ,சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிக்கும் அறிவிப்பு வீடியோ வெளியானது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடிக்க, இவருடன் நாயகியாக திரிப்தி  டிம்ரி ,வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை காஞ்சனாவும் நடிக்கிறார். இவர் 2017ல் சந்தீப் இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பாட்டியாக நடித்தார்.

Oct 30, 2025

 8 படங்கள் அக்.,31ல் ரிலீஸ்.

தமிழ் சினிமாவில் அக்.,31ல் "ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன், மெஸன்ஜர், பரிசு, ராம் அப்துல்லா ஆண்டனி, தடை அதை உடை, தேசிய தலைவர், வட்டக்கானல்" ஆகிய எட்டு படங்கள் அக்.,31ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைச்சேர்த்தால் இந்தாண்டில் வெளியான படங்கள் எண்ணிக்கை 230 ஆக உயரும். 

Oct 23, 2025

விக்ரம், அனிருத் உடன் இணையும் ''ஹாய்'

''ஹாய்' பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதன் மூலம் ,முதன்முறையாக இவர் விக்ரமுடன் இணைகிறார். 

Oct 23, 2025

'டீசல்' படம் தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள், உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை.

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த 'டீசல்' படம் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ரிலீஸாகிறது. ஹரிஷ் பேசியதாவது, ஆக்ஷன் ரோல் பண்ணியிருக்கேன் .தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள் உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை, மக்களுக்கு படமாக இருக்கும், என அறிவித்துள்ளனர்.

Oct 23, 2025

'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தியில் ரீமேக் .

தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப பில் வெளியான படம் 'சங் கராந்திகி வஸ்துனம்' இந்தாண்டு பொங்கலுக்கு ,இதை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, ஹீரோவாக அக்ஷய் குமாரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

Oct 23, 2025

'தி டார்க் ஹெவன் என்ற  படத்தில் ஹீரோவான 'டிவி' நடிகர் சித்து.

டிவி சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து, இப்போது 'தி டார்க் ஹெவன் என்ற  படத்தில் ஹீரோவாகிவிட்டார். பாலாஜி இயக்கி உள்ளார். இப்பட விழாவில் பேசிய சித்து, "இதில்  போலீஸ் அதிகாரியாக வருகிறேன்  கிரைம் திரில்லர் கதை. காட்டுப்  பகுதியில் அதிக நாட்கள் படப் பிடிப்பு நடந்தது. தர்ஷிகா ஹீரோயின். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. பாசிடிவ் விஷயங்கள் குறைந்து விட்டது. 

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 85 86

AD's



More News