25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Nov 13, 2025

இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தின், அடுத்த வாரிசு யத்தீஸ்வர் ராஜா!

இளையராஜாவை தொடர்ந்து, அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி ஆகியோரும். இசை துறைக்கு வந்தனர்., கார்த்திக் ராஜாவின் மகனும், இளையராஜாவின் பேரனுமான யத்தீஸ்வர் ராஜாவும், 'போற போக்குல' என்ற பெயரில் ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்து பின்னணி பாடியுள்ளார். இந்த ஆல்பத்தை ரஜினி, கமல் வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகி வருகிறார், யத்தீஸ்வர் ராஜா.

Nov 13, 2025

கிண்டலடித்த ரசிகர் : சூரி  தகுந்த பதிலடி!

குடும்பத்துடன் நடிகர் சூரி தனது சொந்த ஊரான ராஜாக் கூரில் தீபாவளி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்தார். "திண்ணைல் கிடந்த வனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட் டார். அதற்கு சூரி, "திண்ணையில் மட்டும் இல்லை நண்பா”,” பல நாட்கள் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்”... இவைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால், வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என தகுந்த பதிலளித்துள்ளார்.

Nov 13, 2025

'டாடா' இயக்குனர் கணேஷ் துருவ் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில்  துருவ் நடித்து வெளியான 'பைசன்' படம் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. அவற்றில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் இந்த படம் தொடர்பான பணிகள் துவங்கி உள்ளன. தற்போது ரவி மோகனை வைத்து தற்போது “கராத்தே பாபு” படத்தை இயக்கும் கணேஷ் அடுத்து துருவ் படத்தை இயக்குகிறார். 

Nov 06, 2025

'டியூட்' படம் மூலம் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் ,கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் , வெளியான படம் உலகம் அளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் 'லவ்டுடே, டிராகன்' படங்களை தொடர்ந்து 'டியூட்' படம் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார்.இவரின் ஹாட்ரிக் ஹிட் படங்களில் மலையாள நடிகைகள் நடித்தது ராசியாக பார்க்கப்படுகிறது. 'லவ் டுடே ' யில் இவானா, 'டிராகன்'ல் அனுபமா பரமேஸ்வரன், 'டியூட்'ல் மமிதா பைஜூ நடித்தனர்.

Nov 06, 2025

சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ள 'மயிலா' திரைப்படம்.

 நடிகை செம்மலர் அன்னம் முதன்முறையாக 'மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் நடக்கும் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை பேச உள்ளது. நடிகை செம்மலர் அன்னம் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார்.

Nov 06, 2025

நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தில் 2வது நாயகியாக நடிகை சுஷ்மிதா பட்.

நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை ஆர்.கார்த்திக் இயக்குகிறார். இதன் ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக 3 நடிகைகள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக ஹிந்தி நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். 2வது நாயகியாக தமிழில் 'லவ் மேரேஜ்' படத்தில் நடித்த சுஷ்மிதா பட் இணைந்துள்ளார். 3வது நாயகியை தேர்வு செய்வதில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

Nov 06, 2025

நவ. 7ம் தேதி 8 படங்கள் ரிலீஸ்.

நவ. 7ம் தேதி, 'அறிவான், ஆரோமலே, சிங் சாங், கிறிஸ்டினா கதிர் வேலன், அதர்ஸ், பகல்கனவு, வட்டக்கானல், வீரத்தமிழச்சி' ஆகிய 8 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2024ல் மொத்தமே 234 தமிழ் படங்கள் ரிலீசான நிலையில், இந்தாண்டில் இப்போதே 222 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன.

Nov 06, 2025

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா சாப் டர் 1' படம் பணத்திற்காக எடுக்கவில்லை.

 ‘காந்தாரா சாப் டர் 1' ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய படம் 850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படம் பற்றி ரிஷப் ஷெட்டி, ''காந் தாரா சாப்டர் 1ஐ பணத்திற்காக எடுக்கவில்லை. நான் வேறு கதையைப் படமாக்கியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை கலாசார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அதிகம் பேசிய போது இதை நியாயத்துடன் முடிக்க நினைத்தேன். அதன் முன்கதையை சொல்வதன்மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் நம் பிக்கையால் இந்த படத்தை எடுத்தேன்" என்றார்.

Nov 06, 2025

நடிகை மோகினி 15 ஆண்டுக்கு பின் மலையாள படத்தில் ரீ என்ட்ரி .

தமிழில் தனது 14வது வயதிலேயே 'ஈரமான ரோஜாவே' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி.தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த 'கலெக்டர்' படத்தில் நடித்திருந்தார். தற் போது 15 ஆண்டுகளுக்கு பின், மலையா ளத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகை மோகினி. பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும், இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.

Oct 30, 2025

ரியோராஜ் ,மாளவிகா மனோஜ் நடித்துள்ள படம்'ஆண்பாவம் பொல்லாதது’ .

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்.31ல் ரிலீசாகிறது. படம் பற்றி ரியோ ராஜ், "படத்தில் திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் பிரச்னைகளை ஆண்கள் சைடில் இருந்து பேசியிருக்கிறோம்.பெண்ணியம் பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இது ஆண்களுக்கு சப்போர்ட்டிவான படம் " அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான படம் கிடையாது,  என்றார்.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 85 86

AD's



More News