பாரா உலக வில்வித்தை: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஷீத்தல் தேவி.
பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை-3) போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, சகநாட்டவரான சரிதாவை எதிர்கொண்டார்.
இரு கைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, சிறப்பாக செயல்பட்டு 145-143 என்ற புள்ளிக் கணக்கில் சரிதாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் ஷீத்தல் தேவி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜதா செய்டானை எதிர்கொள்கிறார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சரிதா, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை சந்திக்கிறார்.
0
Leave a Reply