25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கதிர்காமம் முருகன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதிர்காமம் முருகன்.

முருக வழிபாட்டின் பழமையை பறை சாற்றும் தலம் கதிர்காமம்.இலங்கையின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தில் இக்கோயில் உள்ளது கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி திரைக்குப் பின்புறம் நின்று இங்கு பூஜை செய்கிறார்கள். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் கருவறையில் முருகன் சிலை கிடையாது. அங்குள்ள பெட்டிக்கே பூஜை நடக்கும். அதை பக்தர்கள் காண முடியாது.

சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர் காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி,கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை திருமணம் புரிந்த முருகன் தனக்கு விருப்பமான இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார்.

இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.

காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். கதிர்காம மலையிலிருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர்.

இங்குள்ள பழங்குடி வேடுவர்கள் ,முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர்.

அருணகிரிநாதர் 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என பாடியுள்ளார். கதிர்காமத்தில் பூஜை செய்யும் கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.

எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் 2100 ஆண்டுகளுக்கு முன் கோயில் எழுப்பினான்.

விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) சன்னதி தெற்கு நோக்கியும், வள்ளி சன்னதி வடக்கு நோக்கியும்எதிரெதிரில்உள்ளன.இங்கு முருகனின்கருவறைவண்ணத்திரையால்மூடப்பட்டிருக்கும்.அதில்வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை 'கப்புறாளைமார்' திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பிப்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News