'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் மனை எண் 666" ஆகிய படங்கள் பிப்ரவரி 21ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன், தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்படங்களுக்குஎதிர்பார்ப்புஉள்ளன. 2025ல்கடந்துபோன 6 வாரங்களில்அதிகபட்சமாக 9 படங்கள் வெளி வந்தன.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அசத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடித்து வெளியான அனிமல் ரூ.900 கோடி, புஷ்பா 2 ரூ.1800 கோடி வசூலை கடந்தன. இவர் நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து அசத்தி உள்ளது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.
பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நடித்து 2023லேயே ரிலீஸாக வேண்டிய படம் 'ஆலம்பனா' தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்படம் இப்போது மார்ச் 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் கடந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றி பெற்றது. இதை யடுத்து கிடப்பில் கிடக்கும் பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகின்றன.
ராணியாக வாழ்ந்த கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்து சொந்தமாக விமானம் ,கப்பல், ஹோட்டல், தனக்கென புல்லட் வைத்திருந்த முதல் நடிகையும் கடைசி நடிகையும், நம்ம கே ஆர் விஜயா அம்மா அவர்கள் மட்டும்தான். அழகிலும், சிரிப்பிலும் சிறந்து விளங்கியவர் கே ஆர் விஜயா .
அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்., 6ல் வெளியான படம் 'விடாமுயற்சி'. ஆ ஷன் கலந்த கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது படம் வெளியாகி 4 நாட்களுக்கு பின் இப்படம் தமிழகத்தில் ரூ.60 கோடி, பிற மாநிலங்களில் ரூ.10 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் இந்தவாரம் 14ல் காதலர் தினத்தில் "2கே லவ் ஸ்டோரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, அது வாங்கினால் இது இலவசம் ஒத்த ஓட்டு முத்தையா, படவா, தினசரி, கண்நீரா, 9 ஏஎம் டூ 9 பிளம் வேலண்டைன்ஸ் டே, பபி அண்ட் பேபி" ஆகிய 10 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. இதன் உடன்'கேப்டன் அமெரிக்கா பிரேவ்" நியூ வேர்ல்டு' என்ற ஹாலிவுட் படமும் வெளியாகிறது.
துல்கர் சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதை பகிர்ந்து, "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். 13வது திரைப்பயணத்தில் இது கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார் துல்கர். தெலுங்கு நடிகர் ராணா உடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்து, நடிக்கும் படம் 'காந்தா'. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார். ஏப்., 10ல் படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்திலிருந்து 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்துள்ளாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
.பார்க்கிங் ' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை இயக்குகிறார். அடுத்து அவரின் 50வது பட அறிவிப்பும் வந்தது. இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிம்புவே தயாரிக்கிறார் தற்போது ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே தயாரிக்க முன்வந்தேன். இதுபற்றி கமல் சாரை சந்தித்து நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன் " என்றார். இதே போல் சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் சிம்பு பிறந்தநாளை கொண்டாடினார். அவரது 49வது படஅறிவிப்பு வெளியானது.
பிரமாண்ட சரித் திர புராண படம் 'கண் ணப்பா'சிவ பக்தர் கண்ண வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் ருத்ராவாக பிரபாஸ் . விஷ்ணு மஞ்சு நடிக்க, முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், மோகன்பாபு ஆகியோர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால், அக்ஷய் குமார் நடித்து வருகின்றனர். இவர்களுடன் 'ருத்ரா' எனும் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இவரின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏப்., 25ல் பன்மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.