25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெள்ளித்திரை

Jul 16, 2026

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் மற்றும் வி.சி. குகநாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் பலர் களமிறங்கியுள்ளனர்.

Jul 16, 2026

எஸ். ஜானகிக்கு இசை அஞ்சலி.

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் உள்ளிட்டோர் இணைந்து 'காற்றில் எந்தன் கீதம்' பாடலைப் பாடி இசை மரியாதை செலுத்தினர்.

Jul 16, 2026

ரூ.100 கோடி வசூலை கடந்த சமந்தாவின் படம்.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்') உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. சமந்தாவின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் படமாக இது அமைந்துள்ளது.

Jul 16, 2026

தாய் கிழவி' இயக்குநருக்கு கார் பரிசு.

ராதிகா நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' திரைப்படம் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது. படத்தின் 100-வது நாள் விழாவில், இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன

Jul 16, 2026

இந்தியாவில் வெற்றி... ஜப்பானில் ஏமாற்றம்

ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்த நிலையில், ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அங்கு முதல் நாளில் வெறும் 900 பேர் மட்டுமே படம் பார்த்ததாகவும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Jul 16, 2026

ஜூலை 17-ல் 6 தமிழ் படங்கள் ரிலீஸ்?

தமிழ் திரையுலகில் ஜூலை 17-ஆம் தேதி ஒரே நாளில் 'அர்ஜுனன் பேர் பத்து', 'அருள்வான்', 'அன்பே டயானா', 'டார்க் ஹெவன்', 'கண் இமைக்கும் நேரத்தில்', 'நாடோடி கூட்டம்' உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் தங்களது வெளியீட்டு தேதியை மாற்றக்கூடும் என திரையுலகில் பேசப்படுகிறது.

Jul 13, 2026

இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு: இசை உலகின் பொற்காலம் முடிந்தது.

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்று போற்றப்பட்டவருமான எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.1938 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றார். 1956-ஆம் ஆண்டு வானொலி இசைப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது, அவரது இசைப் பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.திரையுலகில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடல், இன்று வரை தமிழ் இசையின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தார். குழந்தையின் மழலைக் குரல் முதல் முதியவரின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் பாடும் அபார திறமை அவருக்கே உரியது.நான்கு முறை தேசிய விருது பெற்ற ஜானகி, தமிழில் 'செந்தூரப்பூவே...' (பதினாறு வயதினிலே) மற்றும் 'இஞ்சி இடுப்பழகா...' (தேவர் மகன்) உள்ளிட்ட பாடல்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும், கேரள அரசு விருது 11, ஆந்திர அரசு விருது 9, தமிழக அரசு விருது 6, ஒடிசா அரசு விருது 1, பிலிம்பேர் விருதுகள் 20 மற்றும் இலங்கையின் 'ஞான கான சரஸ்வதி' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.2016-ஆம் ஆண்டு பாடகியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஜானகி, தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

Jul 09, 2026

'அன்பே டயானா' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'ஜமா' பட புகழ் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'அன்பே டயானா'. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் ரோஜா மற்றும் சேத்தன் நடித்துள்ளனர்.கதைக்களம்: ஒரு ஆங்கிலோ-இந்தியன் பெண்ணுக்கும், வட சென்னை பையனுக்கும் இடையே மலரும் சுவாரசியமான காதல் கதையே இப்படம்.ரிலீஸ் தேதி: படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Jul 09, 2026

மீண்டும் தமிழ் சினிமாவில் உபேந்திரா!

பிரபல கன்னட நட்சத்திரமான உபேந்திரா, தமிழில் 'சத்யம்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.தற்போது இவர் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, நடிகர் அதர்வா நடிப்பில் ஒரு அதிரடி (Action) கதையை இயக்கவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் படத்தில், ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க உபேந்திரா கமிட்டாகியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jul 09, 2026

'போனஸ்' வெற்றி மகிழ்ச்சியில் சமந்தா.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்ட்டி பங்காரம்' (தமிழில் எங்கள் தங்கம்) திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.இதுகுறித்து பேசிய சமந்தா, "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்பியதால் படம் எப்படி வரவேற்கப்படும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் பட்ஜெட்டை மீட்பதே முதன்மை இலக்காக வைத்தோம். அதற்கு மேல் கிடைக்கும் வசூல் எங்களுக்கு போனஸ் என்றே நினைத்தோம். இப்போது அந்த போனஸ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது," என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 86 87

AD's



More News