25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 06, 2026

மீண்டும் மலையாளப் படத்தில் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு ஹீரோவாகவும், நகைச்சுவை நடிகராகவும் தொடர்ந்து பிஸியாக உள்ளார். மலையாளத்தில் ஏற்கனவே குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது ஹரிவராசனம் என்ற புதிய மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் சைஜு குருப், "யோகி பாபுவை எங்கள் படக்குழுவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Aug 06, 2026

இந்தியாவில் ரூ.330 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன்'.

டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தியாவில் மட்டும் வெளியான முதல் ஐந்து நாட்களில் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகளவில் ரூ.8,800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம், ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை தனது தயாரிப்பு செலவை விட நான்கு மடங்கு அதிக வசூலை ஈட்டியுள்ளது.

Aug 06, 2026

ஆக. 16-ல் பாரதிராஜா, பாக்யராஜுக்கு நினைவு விழா.

.மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு தமிழ் திரையுலகின் சார்பில் 'ராஜகோபுரங்கள் நினைவு உற்ஸவம்' என்ற பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்துகின்றன. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலும், பாக்யராஜின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலும் மணிமண்டபம் அமைத்து, மார்பளவு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

Aug 06, 2026

சூதாட்ட பின்னணியில் உருவான 'அயம் கேம்'.

துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து பல மொழிப் படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் மலையாளத்தில் உருவாகியுள்ள அயம் கேம் திரைப்படம் முக்கியமானது. இதில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், சூதாட்டத்தை மையமாகக் கொண்ட பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது. வித்தியாசமான சூதாட்டக்காரராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Aug 06, 2026

ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடும் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் கன்னிவெடி, சத்தியவான் சாவித்திரி ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் தி பாரடைஸ். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் சம்மதித்துள்ளார். ஏற்கனவே நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் தசரா திரைப்படம் வெற்றி பெற்றது. அந்த நட்பின் காரணமாகவே முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாட அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Aug 06, 2026

இந்திய குடியுரிமை பெறவுள்ள நடிகர் அகில்.

நாகார்ஜூனா - அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகில், விரைவில் இந்திய குடியுரிமை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தாலும், "நான் எப்போதும் இந்தியன்தான். இந்திய குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

Jul 30, 2026

ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசிலின் ஃபேண்டசி படம். 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'

இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் குழந்தைகளை கவரும் வகையிலான ஃபேண்டசி-காமெடி கதையாக உருவாகியுள்ளது.இதில் மேஜிக் கலைஞராக வரும் பஹத் பாசில், ஒரு சிறுமியை தனது மாயாஜாலத்தால் மகிழ்விக்கும் போது எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களே படத்தின் மையக்கரு. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Jul 30, 2026

-மனித உணர்வுகளை பேசும் யோகிபாபுவின் 'காகங்கள். .

எழுத்தாளர் ஆனந்த் இயக்கத்தில், அண்ணாமலை தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'காகங்கள்'. இதில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோ மோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள் மற்றும் ஆன்மிக தேடலை மையமாகக் கொண்ட இப்படத்தில், காகங்களின் தனித்துவமான குணாதிசயங்களை கதையின் முக்கிய அம்சமாக எடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Jul 30, 2026

"உள்ளம் அழகாக இருந்தாலே போதும்" – ராஷ்மிகா.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா, அழகு குறித்த கேள்விக்கு மனதை கவரும் பதில் அளித்துள்ளார். "வெளிப்புற அழகை விட மனதின் தூய்மையே முக்கியம். நல்ல மனதுடன் வாழ்ந்தால் அதுவே உண்மையான அழகை வெளிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து வாழ்வதே சிறந்த அலங்காரம்" என்று அவர் கூறியுள்ளார்.

Jul 30, 2026

'வாரணாசி' தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடித்து வரும் 'வாரணாசி' படத்தின் தலைப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தலைப்பை முன்பே பதிவு செய்திருந்த தயாரிப்பாளர் சுப்பா ரெட்டி, பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜமவுலி தரப்புக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 90 91

AD's



More News