25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)

தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணி: 300 கிராம் (துருவியது),
சர்க்கரை: 350 - 400 கிராம்,
நெய்: 100 - 150 மில்லி,
முந்திரி மற்றும் பாதாம்: தலா 10,
ஏலக்காய் தூள்: 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் (அல்லது ஆரஞ்சு) ஃபுட் கலர்: 2 சிட்டிகை,
எண்ணெய்/நெய்: 1 தேக்கரண்டி (முந்திரி வறுக்க),

செய்முறை:
பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும். துருவிய
பூசணியை கைகளால் நன்றாகப் பிழிந்து சாற்றை தனியாக எடுத்துவைக்கவும்.
ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய பூசணிக்காயைச் சேர்த்து
10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
பூசணி வதங்கியதும், பிழிந்து எடுத்த பூசணிச் சாற்றை ஊற்றி மூடி வேகவைக்கவும்.
தண்ணீர் வற்றி, பூசணி நன்றாக வெந்திருக்க வேண்டும்.
பிறகு, சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கிளறவும். சர்க்கரை உருகி அல்வா தளர
ஆரம்பிக்கும்.
மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும். இடையில் கொஞ்சம்
கொஞ்சமாக நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அல்வாவில் சேர்த்து
இறக்கவும். இப்போது நாவில் கரையும் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News