25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சம்பந்தபுரம் பகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர் அருகே நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக 864 தொகுப்பு வீடுகள் கட்ட 2020 மே மாதம் பூமி பூஜை போடப்பட்டது.

இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து 2023ல் பணிகள் முடிந்தன.ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் சமையலறை, படுக்கையறை,குளியலறை, கழிப்பறை, வரவேற்பு அறை வசதிகளுடன் கட்டப்பட்டது.பணிகள் முடிந்த நிலையில் கழிவு நீர் வெளியேற்றம் சுத்திகரிப்பு பணிகளுக்காக தாமதமாகி பணிகள் முடிவு பெற்றன.முதல் கட்டமாக 100 பயனாளிகளுக்கு வீடு ஒப்படைப்பிற்கான ஆணை  வழங்கப்பட்டது.

நேற்று அடுக்குமாடி குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் எம். எல். ஏ., தங்கபாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் ராஜ கொம்பையா பாண்டியன், உதவி பொறியாளர் ஸ்டெசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News