25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் எதிர்வரும் 09.11.2025 அன்று காலை 6.30 முதல் நடைபெற உள்ளது.மேலும், 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் மற்றும் 25 வயதிற்கு மேல் நிரம்பியவர்களில் ஆண்களுக்கு 10 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

 மேற்கண்ட பிரிவுகளில் முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மும்,  மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும்,  நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக ரூ.1,000/- மும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ/மாணவியர் தங்களது வயதுச் சான்றிதழை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 09.11.2025 அன்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

வெற்றி பெற்ற மாணவ/மாணவியர் தங்களது வங்கிக்கணக்கு புத்தக நகலினை (Active Account with correct A/C Number & IFSC Code Only) மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும் பரிசுதொகை வங்கி பரிவர்த்தனை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News