25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Feb 06, 2025

, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்...

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன்என்பவனை,சூரியஅஸ்தமனத்துக்குள்கொன்றுவிடுவேன்அல்லதுதீக்குளிப்பேன் எனசபதம் செய்தான். அர்ஜுனன்.அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன்,கர்ணன்போன்றோர்அவனுக்குபாதுகாவலாகஇருந்தனர்.அர்ஜுனனால்அவனைநெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும்நெருங்கியது." என்னகிருஷ்ணா...சூரியன்அஸ்தமிக்கும்நேரமாகிறதே.!...ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"என்றான் அர்ஜுனன்.சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.உடன் அர்ஜுனனைப் பார்த்து," அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது.ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப்படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான்.அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்.... *சூழ்ச்சி செய்பவன் ஒருபோதும் வென்றதே இல்லை*_ 

Jan 30, 2025

துஷ்ட சக்தி விலக....

வீட்டின் உரிமையாளரின் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருப்பது  சிறப்பானது.வீட்டின் முற்றத்தில் துளசி செடி வைத்து வளர்ப்பது மிகவும் மங்களகரமான அதிர்வலைகளை வீட்டில் ஏற்படுத்தும், தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி   வணங்குவதும் நன்மைகளை நடைபெற வைக்கும்.

Jan 30, 2025

இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்

நியாயமான முறையில் நாம் சம்பாதித்த அனைத்தையும் இழந்திருந்தாலும் ,அவை அனைத்தையுமே திருப்பித் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதக்கூடிய, இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒருமுறை நிறுத்தி, நிதானத்துடன் ,திருச்செந்தூர்  செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு, கூறும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான, நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறதுமந்திரம் ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடாஷ்சரனே என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா"

Jan 23, 2025

கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ள தூண் விழும் நாள்  கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் மகாராஷ்டிரா மாநிலத்தில் மர்மம் நிறைந்த, கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ளது.இங்கு சிவனை சுற்றி நான்கு தூண்கள் உள்ளது.. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களை குறிக்கிறது. அவைகள் சத்ய யுகம், த்ரேத யுகம், துவாபரயுகம் கலியுகம் இதில் ஒவ்வொரு யுகம் முடியும் போது ஒவ்வொரு தூண்கள் விழுமாம். மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்த நிலையில், மீதம் இருக்கும் ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண்விழும் நாள்  கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.

Jan 16, 2025

தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரியினால் கிட்டும் பலன்கள் 

 தாமரைத்தண்டு திரி விளக்கு: முன்ஜன்ம பாவம்  நீங்கும்.  பஞ்சு திரி விளக்கு : தூய இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் மங்கலம் நிலைக்கும். தாமரைத்தண்டு திரி விளக்கு: இவ்வகை திரி தீபம் ஏற்றுவதால் முன்ஜன்ம பாவம் நீங்கும்.  சிவப்பு திரி விளக்கு: திருமணத்தடை நீங்கும், புத்திர பத்தியம் கிட்டும். வெள்ளை எருக்கன் திரி விளக்கு :  இந்தத் திரியை தீபம் ஏற்றப் பயன்படுத்துவதால் வீட்டில் செல்வம் தங்கும்.

Jan 09, 2025

குளிக்காமல் பூஜை செய்யக்கூடாது.

குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது. குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது. 11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம். இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும். வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள்.

Jan 05, 2025

கோயிலில் நிலைவாசலை மிதிக்க கூடாது.

வீட்டு அருகிலிருக்கும் பழமையான முருகன் கோயில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வர நினைத்தது நிறைவேறும்.கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அகலமான நிலைவாசலை தாண்டி தான் செல்ல வேண்டும்.அதை மிதித்து செல்லுதல் கூடாது. இதை தாண்டி செல்வதால் நமது பிரச்சனைகளையும், தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தாண்டி செல்வதாக ஐதீகம்.அந்த படிக்கெட்டை குனிந்து கைகளால் தொட்டு புருவத்தின் நடுவே வைத்து அழுத்துவதால் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் தூண்டப் பெறும்.இதையெல்லாம் கடைபிடித்தால் உங்க வாழக்கைல இனிமே கஷ்டமே வராது!

Jan 02, 2025

ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

கோவிலில் அபிஷேகம் நடைபெறும் சமயம் பிரகாரம் சுற்றக் கூடாது.கோவிலுக்குள் கோபம் கொள்ளுதல், கடுமையான வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது.தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும்.கற்பூர தீபம் காட்டும் போது மனதை ஒருநிலை படுத்தி சுவாமியைக் காண  வேண்டும்.ஆலயத்தில் வழிபாடு நடக்கும் போது நெட்டி முடித்தல், சோம்பேறி முறித்தல் கூடாது.வெற்றிலை பாக்கு அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். நாம் அதை கோவிலுக்குள் சுவைத்து பார்க்க கூடாது.ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

Jan 01, 2025

நம் வீட்டு வாசலில்  அதிர்ஷ்டம் பெருக இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள். 

 கேரளா மக்கள் யானை உருவத்தை வைத்திருப்பார்கள்.யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், யானை படங்கள், யானை பொம்மைகளை வாங்கி வீட்டின் வாசலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும்.பல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் தெரியும், குதிரை, யானை போன்றவற்றில் மண் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார்கள்.இவையெல்லாம் ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சின்னங்களும், பொருட்களும் ஆகும்.இவற்றில் உங்களுக்கு பிடித்தமான வாங்கி வைத்து நீங்களும் அதிர்ஷ்டம் பெறலாம்.

Dec 23, 2024

எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு,நெய்,இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது, ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது, பேன் பார்த்தல், நகம் வெட்டுவது, இந்த செயல்களை செய்யக்கூடாதுஎந்த ஒரு நல்ல விசேஷத்திற்கு நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகு தான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும் .எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News