25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Nov 21, 2024

பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது

மனிதர்கள் ஆகட்டும், மற்ற எந்த உயிரினங்கள் ஆகட்டும் நாம் அவர்களைப் பார்த்து பாவம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. நம் மனதளவில் இரக்கப்படலாம், உதவிகள் செய்யலாம்.. ஆனால் அவர்களை பார்த்து அய்யோ பாவம் அல்லது- பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது.அப்படி சொன்னால் அவர்களுடைய பாவத்தில் 6 மாத பாவம் நம்மை வந்து பிடிக்கும் என்பது சாஸ்திரம்.

Nov 07, 2024

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக ….

வீட்டில் இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமி தாயார்க்கு மிகவும் பிடித்த ஒன்று. கற்கண்டு ,சாக்கரை, தேன் போன்றவை வீட்டில்வைத்தல் அவசியம். மஞ்சள் குங்குமம் போன்றவை| மங்களகரமான பொருட்கள்.வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பது லட்சுமி தேவிக்கு பிடித்தவை. பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி  தாயார்.அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது.| வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்களை போட்டு வீட்டில் வைப்பது நன்மை தரும். வெள்ளிக்கிழமையில் வில்வ இலையால் லட்சுமி தேவியை  அர்ச்சிப்பது சகல செலவங்களும் கிடைக்கும்.

Nov 07, 2024

பிஞ்சு போன செருப்பு

நம்மள வேண்டாம்னு விட்டுட்டு போனவங்க பிஞ்சு போன செருப்பு மாதிரி. அதை தச்சு போட்டாலும் பிச்சிக்கிட்டு தான் போகும். கருமம் போய் தொலையட்டும், கண்டுக்கவே கூடாது.

Nov 03, 2024

 கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.

1. கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது. 2. கோவிலுக்கு சென்றால் விநாயகர் கோயிலை வணங்காமல் வரக்கூடாது. 3.   கண்டிப்பாக.சிவன் கோயிலுக்கு போனால் மூன்று முறை வலம் வர வேண்டும் . 4.பெருமாளுக்கு முன் கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டும். 5.சிவன் கோவிலுக்கு சென்றால் அஞ்சு நிமிஷம் அமர்ந்து (உட்கார்ந்து)வர வேண்டும். 6.ஆனால் பெருமாள் கோயிலுக்கு சென்றால் உட்காரக்கூடாது (ஏனெனில்) நம்ம கூடவே வருவாங்க!

Oct 30, 2024

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய, பூஜை செய்து புத்தாடை உடுத்த நல்ல நேரம்.

அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி வருகிறது. இந்நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தில் நாம் குளிக்கும் வெந்நீரில் கங்கா வாசம் செய்வது ஐதீகம்.எனவே இந்நேரத்தில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.இப்படி குளிப்பதால் கங்கையில் நீராடிய பலனைப்பெறலாம்.இன்று எமகண்டம் காலை 6மணி முதல் 7.30 வரை.காலை 6 மணிக்குள் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள், உள்ள சுக்கிர ஓரையில் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம். Happy deepawali

Oct 28, 2024

சாஸ்திரங்கள் கூறும் சில  பழக்கவழக்கங்கள்

1. அலை மோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும் 2. தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது  3. தலையணை மீது உட்காரவும் கூடாது. 4 சாப்பிடும் போது நம் நிழல்  சாதத்தில் விழக்கூடாது. 5 கைவிரலை நீக்கியோ கையை உதறியோ சாப்பிடக் கூடாது.  6.சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி முடித்தவுடன் அடுத்தவர் மீது விழும் படி உதறக் கூடாது. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்  இதில் இருக்கும் அறிவியல்  உண்மை புரியும்.

Oct 24, 2024

சோம்பேறி

எந்தவொருவேலையும்செய்யாமல்நேரத்தினைவீணடிப்பவர்களை, உழைக்காமல்சோம்பேறியாகஇருப்பவர்களைமகாலட்சுமிவிரும்புவதில்லையாம்.கொந்தளிப்புகளில் மனம்கஷ்டப்படும் போது கோவில் தரிசனம் மனதிற்கு நிறைவையும் சாந்தத்தையும் தரும் நாம் ஆலயத்துக்குச் செல்லும் போது கோயில் நடை சார்ந்தியிருந்தால் அதனை அபசகுனமாக எண்ணாது,  கோபுர தரிசனத்தை செய்தால்  இது தெய்வ தரிசனப் பலன்களை பெற்றுத்தரும் 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News