25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


உலக இளையோர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக இளையோர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.

அமெரிக்காவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பசந்த் குமார் மேக்வால் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் பசந்த் குமார், அல்ஜீரியாவின் யூனஸ் அயாச்சி மற்றும் பிரிட்டனின் ஓடிஸ் பூலே ஆகியோர் தலா 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டினர்.

இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பசந்த் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான பசந்த் குமார், உலக இளையோர் தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News