25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Feb 27, 2025

தங்கம்  வாங்கும் யோகம் உண்டாக வெள்ளியை பூஜியுங்கள்

எந்த வீட்டில் வெள்ளி பொருட்கள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தங்கம் குவிந்து கிடக்கும்வெள்ளியை நம்முடைய வீட்டில் நிறைய வாங்கி சேர்த்துக் கொண்டே இருந்தால், அந்த வெள்ளி பொருட்கள் மற்ற உலோகமான தங்கத்தை ஈர்க்கும், தங்கத்தோடு மட்டுமல்லாமல் மற்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பொருட்களையு ம் நம்முடைய வீட்டில் வாங்கக்கூடிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்,பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலையின் மேல் ,ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து, கொஞ்சமாக மஞ்சள்தூளை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து அந்த வெற்றிலையில் இருக்கும் வெள்ளி' பொருளின் மேலே மூன்று முறை அர்ச்சனை செய்தால் போதும், அர்ச்சனை செய்யும்போது 'எம் சுக்கிர தேவாய நமஹ' என்று மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.தொடர்ந்து செய்து வர தங்கம்  வாங்கும் யோகம் உண்டாகும். 

Feb 20, 2025

திருஷ்டி கழிக்க…..

திருஷ்டி கழிக்க பூசணிக்காய், கற்பூரம், எலுமிச்சை பழம், கல் உப்பு, மிளகாய் உள்ளிட்டவைகளில் சுத்தி போடுவது வழக்கம். அந்த வகையில் எரிந்த திரிகளை கொண்டும் சுத்தி போடலாம்.தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் அல்லது வாரம் ஒருமுறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இந்த திரிகளை பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிகளை தூபக் காலில் போட்டு, அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாயிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை அளிக்கும்.

Feb 17, 2025

காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை.

1.வலது உள்ளங்கை.2.தனது வலதுதோள்.3.கண்ணாடி. 4. கோபுரம்.5.சூரியன்.6. விளக்கு.7.சிவ லிங்கம். 8.இறைநூல்கள்.9.பெற்றோர்.10.தாமரை,11துளசி மாடம்.12.பசு,13.யானை.14.கடல்.15.பொன்.

Feb 13, 2025

கிருஷ்ணரின் பாத ரகசியம்'

பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில்பாதங்களை தரிசித்த பிறகு தான், முகத்தை தரிசிக்க வேண்டும் என்பார்கள். அதாவது, இறைவனின் திருவடியை அடைவதே இந்த பிறவியின் நோக்கம் என்பதை உணர்த்தவே இப்படி சொல்லப்படுகிறது. இதற்குள் பலரும் அறியாத மற்றொரு ரகசியமும் உள்ளது. கிருஷ்ணரின் பாதங்களை தாமரை பாதங்கள் என்பார்கள். தாமரை, சேற்றில் முனைத்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் மேலே உயர்ந்து நிற்கும். அது போல உலக இன்பங்களாக சேற்றை விட கிருஷ்ணரின் கருணை உயர்ந்தது என காட்டுதாகும். கிருஷ்ணரின் அனைத்து புனித சின்னங்களும் கிருஷ்ணரின் திருவடிகளில் உள்ளது. சங்கு, சக்கரம், வில், ஸ்வஸ்திக், தாமரை பிறை சந்திரன், மீனம் வஜ்ராயுதம் உள்ளிட்ட பலவிதமான ஆயுத சின்னங்கள் உள்ளன. இவைகள் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும். தீமைகள் எதுவும் நெருங்காமல் பக்தர்களை காக்கும். இது தான் கிருஷ்ணரின் பாதத்தை தரிசிப்பதற்கும் பாதங்களை வீடுகளில் வரைவதற்கு, வைத்து வணங்குவதற்குமான காரணம்.

Feb 06, 2025

, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்...

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன்என்பவனை,சூரியஅஸ்தமனத்துக்குள்கொன்றுவிடுவேன்அல்லதுதீக்குளிப்பேன் எனசபதம் செய்தான். அர்ஜுனன்.அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன்,கர்ணன்போன்றோர்அவனுக்குபாதுகாவலாகஇருந்தனர்.அர்ஜுனனால்அவனைநெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும்நெருங்கியது." என்னகிருஷ்ணா...சூரியன்அஸ்தமிக்கும்நேரமாகிறதே.!...ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"என்றான் அர்ஜுனன்.சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.உடன் அர்ஜுனனைப் பார்த்து," அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது.ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப்படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான்.அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்.... *சூழ்ச்சி செய்பவன் ஒருபோதும் வென்றதே இல்லை*_ 

Jan 30, 2025

துஷ்ட சக்தி விலக....

வீட்டின் உரிமையாளரின் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருப்பது  சிறப்பானது.வீட்டின் முற்றத்தில் துளசி செடி வைத்து வளர்ப்பது மிகவும் மங்களகரமான அதிர்வலைகளை வீட்டில் ஏற்படுத்தும், தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி   வணங்குவதும் நன்மைகளை நடைபெற வைக்கும்.

Jan 30, 2025

இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்

நியாயமான முறையில் நாம் சம்பாதித்த அனைத்தையும் இழந்திருந்தாலும் ,அவை அனைத்தையுமே திருப்பித் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதக்கூடிய, இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒருமுறை நிறுத்தி, நிதானத்துடன் ,திருச்செந்தூர்  செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு, கூறும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான, நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறதுமந்திரம் ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடாஷ்சரனே என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா"

Jan 23, 2025

கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ள தூண் விழும் நாள்  கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் மகாராஷ்டிரா மாநிலத்தில் மர்மம் நிறைந்த, கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ளது.இங்கு சிவனை சுற்றி நான்கு தூண்கள் உள்ளது.. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களை குறிக்கிறது. அவைகள் சத்ய யுகம், த்ரேத யுகம், துவாபரயுகம் கலியுகம் இதில் ஒவ்வொரு யுகம் முடியும் போது ஒவ்வொரு தூண்கள் விழுமாம். மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்த நிலையில், மீதம் இருக்கும் ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண்விழும் நாள்  கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.

Jan 16, 2025

தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரியினால் கிட்டும் பலன்கள் 

 தாமரைத்தண்டு திரி விளக்கு: முன்ஜன்ம பாவம்  நீங்கும்.  பஞ்சு திரி விளக்கு : தூய இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் மங்கலம் நிலைக்கும். தாமரைத்தண்டு திரி விளக்கு: இவ்வகை திரி தீபம் ஏற்றுவதால் முன்ஜன்ம பாவம் நீங்கும்.  சிவப்பு திரி விளக்கு: திருமணத்தடை நீங்கும், புத்திர பத்தியம் கிட்டும். வெள்ளை எருக்கன் திரி விளக்கு :  இந்தத் திரியை தீபம் ஏற்றப் பயன்படுத்துவதால் வீட்டில் செல்வம் தங்கும்.

Jan 09, 2025

குளிக்காமல் பூஜை செய்யக்கூடாது.

குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது. குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது. 11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம். இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும். வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News