இனிப்பு கொழுக்கட்டை / பிடி கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள்-
2 கப் இட்லி அரிசி (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
2 கப் வெல்லக் கரைசல் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
1/2கப் தேங்காய் துருவல், உப்பு, சிறிது ஏலக்காய்த்தூள், சிறிதுநெய்
செய்முறை -
மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் துருவலை சேர்க்கவும். பிறகு ஊறவைத்த இட்லி அரிசியை உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு மற்றும் வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் துருவிய தேங்காய்
ஏலக்காய்தூள், சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து சூடாக்கவும்.
நெய் சூடானதும் அதில் அரைத்து கலந்து வைத்த மாவை ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் மாவை ஒரு நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
சிறிது மாவை எடுத்து உள்ளங்கையை வைத்து அழுத்தி பிடிக்கவும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.10 நிமிடம் கழித்து கொழுக்கட்டைகளை பரிமாறவும்.
மற்றொரு முறையாக கொழுக்கட்டை அச்சில் சிறிது நெய் தடவி வேக வைத்த மாவை உள் வைத்து நன்றாக அழுத்தவும்.மெதுவாகத் திறக்கவும் .மீதமிருக்கும் மாவையும் இதேபோல் செய்து இட்லிப் பானையில் சிறிது தண்ணீர் விட்டு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
0
Leave a Reply