தைபே ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற தான்வி சர்மா... காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் பதக்க வேட்டை!
இந்திய பாட்மின்டன் வீராங்கனை தான்வி சர்மா தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சீனதைபேயில் நடைபெற்ற இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 17 வயதான தான்வி சர்மா, வியட்நாமின் துய்லின் நுகுயெனை எதிர்கொண்டார். வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில், தான்வி 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் 'சூப்பர் 300' சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
17 வயது 222 நாட்களில் இந்த சாதனையை படைத்த தான்வி, சர்வதேச பாட்மின்டன் அரங்கில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.
0
Leave a Reply