25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.

.காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பியபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல் கட்டமாக பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லவ்ப்ரீத் சிங், ராஜா முத்துப்பாண்டி உள்ளிட்டோர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மலர்மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: முதல் 4 இடங்கள்.2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா வெறும் 24 மணி நேரத்தில் 8 தங்கம் உட்பட 16 பதக்கங்களை குவித்து அசத்தியது. இதன் மூலம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறி Top 4-ல் நிறைவு செய்தது.

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சாக்ஷி சௌத்ரி (51 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்!

குத்துச்சண்டை போட்டிகளில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவது, நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News