கைலாச கோயில்: Ellora
கைலாசா கோயில் இந்தியாவின் மிகப்பெரிய குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் எல்லோராவில் அமைந்துள்ளது. இது ஒரே பாறையைக் குடைந்துச் செதுக்கப்பட்ட கோயில் என்று கூறப்படுகிறது அதோடு பல்லவர்களின் கட்டிடக்கலையினைத் தடயங்களாக வைத்திருக்கிறது. வரலாற்று சான்றுகளின்படி இந்த கோயில் கி.பி8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.எல்லோரா கோவில் போல் தலை கீழாக கட்டப்பட்ட கோவில் ,தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான். கோவில்
.இந்த கைலாச நாதர் கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில், இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது 2 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஹிந்து, புத்த மற்றும் ஜெயின் கோவில்கள் என்று மொத்தம் 34 கோவில்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளில், கைலாச நாதர் கோவில் மிகப்பெரிய குகை கோவிலாகும்.ஒரே பாறையை குடைந்து கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில்இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கோவில்கள் இருந்தால் கூட, எந்தக் கோவிலுக்கும் இல்லாத அளவுக்கு கைலாசநாதர் கோவிலுக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. இந்திய கட்டிடக்கலையின் பெருமைக்குரிய சான்றாக இருக்கும் குகை கோவில்களில் இறுதியாக வடிவமைக்கப்பட்ட கோவில் கைலாசநாதர் கோவில் தான் அடையாளத்தை இது சுமந்திருக்கிறது. கைலாச நாதர் கோவிலுக்குப் பிறகு, பாறையைக் குடைந்து எந்தக் கோவிலும் உருவாக்கப்படவில்லை.
0
Leave a Reply