சோம்நாத் கோயில்
ஏழாம் நூற்றாண்டில் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் குஜராத்தில் அமைந்துள்ளது. இது பனிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். முதன்முதலில் இந்த கோயில் ஷியுனா மரபினரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இறுதியாக பிரபல மன்னர் கஜினி முகமதுவால் கி.பி1024ஆம் ஆண்டு சிதைக்கப்பட்டதுசோமநாதர் கோவில், கிருஷ்ணர் தனது லீலாவை முடித்துவிட்டு, பின்னர் சொர்க்கவாசலுக்குச் சென்ற இடமாக நம்பப்படுகிறது. சோமநாத்தில் உள்ள முதல் சிவன் கோவில் கடந்த காலத்தில் அறியப்படாத நேரத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோம்நாத் கோவில் சிறந்த கட்டிடக்கலை மாதிரியாகும். கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமநாதர் கோயிலின் சந்தனக் கதவுகளை ,மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ(LordEllenborough) முயன்றார்.இதனால் ஆங்கிலேயரின் பலவிதமான கண்டனங்களும் தமது தாய்நாட்டின் மதத்திற்கு துரோகம் செய்வதாகவும், சிவலிங்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்தியஅரசின் உள்துறைஅமைச்சரும்துணை பிரதமராக இருந்த சர்தார்வல்லபாய்பட்டேலும் உணவு அமைச்சராக இருந்த கேஎம்முன்ஷியும்(KannaiyalalMaaanekialMunshi) இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் மறுநிர்மாணம் செய்ய மே மாதம்1951ல், இந்தியகுடியரசுதலைவர் டாக்டர். இராஜேந்திரப்பிரசாத்தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் சங்கர்தயாள்சர்மாதலைமையில் சனவரித் திங்கள்1ஆம் நாள்,1995ஆம் ஆண்டு பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
0
Leave a Reply