Chennakesava Temple - சென்னக்கேசவ ஆலயம்
கர்நாடக மாநிலத்தின் பேளூரில் யாகாச்சி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இது ஹோசளப் பேரரசினால் 10 மற்றும் 11ஆம்நூற்றாண்டுக்குஇடையில்ஹோய்சாலமன்னனான விஷ்ணுவர்த்தனனால் கட்டப்பட்டது.இம்மன்னர் பஞ்ச நாராயண ஆலயங்கள் அமைத்தவர் விஷ்ணு பகவானுக்காக உருவாக்கப்பட்டஇந்தகோயில்சோப்புக்கல்லினால் கட்டப்பட்டதுவிஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டதன் காரணம் தொடர்பாக வரலாற்றாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. விஷ்ணுவர்தனனின் போர் வெற்றியைக் குறிக்கவே இது கட்டப்பட்டது என்னும் கருத்தே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்தாக உள்ளது. இக் கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட இராசகோபுரம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது.இத்திருக்கோயிலின் முன்மண்டபத்தில் கண்ணாடி அலமாரியில் பசவபட்டணர், சஸ்லே ஹள்ளி எனும் ஊர் செருப்பு தைப்பவர்கள் காணிக்கையாக வைத்துள்ள செருப்பு உள்ளது. இந்த செருப்பு நாலடி நீளத்தில் இரண்டடி உயர்த்தில் உள்ளது..இவர்கள் கனவில் பெருமாள் வந்து செருப்பு தேய்ந்து விட்டது வேறு செருப்பு தைத்துத் தர வேண்டும் என்று கூறும் போது கிராம மக்கள் ஊரில் பொது இடத்தில் குங்குமத்தைப் பரப்புவார்கள். அதில் பெருமாளின் பாதம் பதியும் எனவும் அந்த அளவுக்கு செருப்பு தைத்துக் கொணர்ந்து பெருமாளுக்கு காணிக்கையாக வைப்பார்களாம்.இவ்வாறு அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட செருப்புகள் இன்னமும் உள்ளன.
0
Leave a Reply