வெயிட் குறைய வெந்தயத் தேநீர் !
வெந்தயத்தில் தேநீர் தயாரித்து குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய டீயை தொடர்ந்து அருந்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
வெந்தயத்தை தேநீராக தயாரிக்க தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி வெந்தயம்
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி தேன்
ஒரு கைப்பிடி துளசி இலைகள்
தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)
வெந்தய தேநீர் தயாரிக்கும் முறைஒரு சிறிய ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது தண்ணீர், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து, பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டவும். இப்போது, இதில் தேனைக் கலந்து குடிக்கவும். இந்த தேநீரை சூடாக குடித்தால் அருமையாக இருக்கும்.
இந்த தேநீரை தினசரி அருந்தினால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் உடல் எடை குறையும் என்பது சிறப்பு. உடல் எடையை குறைக்க உதவும் இந்த வெந்தய டீ குடித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு பல நன்மைகளும் உண்டு.
0
Leave a Reply