ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி)..
ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) இந்தோனேஷியாவில், சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சாரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது.
இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ,இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது.
0
Leave a Reply