இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் .
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில், இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், மாளவிகா, சாத்விக், சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2017ல் நடந்த இந்திய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து 9 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் சாம்பியன் ஆகலாம். இத்தொடரில் லக்சயா சென்2022ல் சாம்பியன் பட்டமும் ,கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டமும் வென்றார். இவர், முதல் சுற்றில் சக வீரர் ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோரும், பெண்கள் ஒற்றையரில் மாளவிகா, ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரீசா, காயத்ரி கோபிசந்த் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
0
Leave a Reply