அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் விழுதுகள் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழுதுகள் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (14.10.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழுதுகள் அருகாமை சேவை மையங்கள் மாவட்டத்தில் மொத்தம் 39 இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ஆத்திப்பட்டி, பாளையம்பட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேலையூர் ஆகிய 3 இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதை அவர்களை தேடிச் சென்று வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர்- கன்னிசேரிபுதூர், இராஜபாளையம், வெம்பக்கோட்டை-கல்லமநாயக்கன்பட்டி, சிவகாசி(நகரம்) ஆகிய 8 இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இம்மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply