தீபாவளி ரேஸில் 4 படங்கள் .
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி நான்கு படங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’, சூர்யா மற்றும் நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’, விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
இந்தப் பட்டியலில் மேலும் படங்கள் சேருமா அல்லது அறிவிக்கப்பட்ட படங்களில் ஓரிரு படங்கள் வெளியீட்டிலிருந்து பின்வாங்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
0
Leave a Reply