பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன் ஆரம்பம்...
பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன் நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. பைனல் வரும் மே 25ல் நடக்க உள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) வாங்கப்பட்ட கேப்டன் ரிஷாப்பன்ட் தான் ,லக்னோ அணியின் பலம். மிட்ஸல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே ஓவரில் முடிவு தலைகீழாக மாறும்,ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வெல்லும் அணியை கணிப்பது கடினம். கடைசி பந்து வரை பதட்டப்படாமல் செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும்.
சென்னை அணிக்காக 43 வயதிலும் 'தல' தோனி விளையாட இருப்பது சிறப்பு.
ஐ.பி.எல்.,தொடர் 13 மைதானங்களில் நடக்க உள்ளது. முதன் முறையாக அனைத்து மைதானத்திலும் முதல் போட்டி துவங்கும் முன் அல்லது போட்டிக்கு இடையில் துவக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கும். இதில் பாலிவுட் நடிகை திஷா படானி, பாடகி ஷ்ரேயா கோஷல் பங்கேற்கின்றனர்.
ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி, இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்படும் 3, 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி தரப்படும்.
ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை, மும்பை முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றன.
0
Leave a Reply