25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பே.புதுப்பட்டி கிராமத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  தலைமையில்,  மக்கள் தொடர்பு திட்ட முகாம் (15.10.2026) நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.3.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 5 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.10.30 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், 20 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்கள், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு   இணைய வழி பட்டாக்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5207 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.16,200/- மதிப்பிலான இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4700/- மதிப்பில் மரக்கன்றுகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.91 இலட்சம் மதிப்பில் பவர் டிரில்லர்கள், சுகாதாரத்துறை சார்பில் 3 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், 15 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 2 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு கடனுதவிகள் என மொத்தம் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான  அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.    

 மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

 இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், தாட்கோ மேலாளர் திருமதி இந்திரா காந்தி, திருச்சுழி வட்டாட்சியர் திரு.கருப்பசாமி, அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News