25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக ஸ்கேட்டிங்: ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஸ்கேட்டிங்: ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்.

உலக ஸ்கேட்டிங் போட்டியின் ரிலே பிரிவில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

பராகுவேயில் நடைபெற்று வரும் உலக ஸ்கேட்டிங் போட்டியில், ஜூனியர் மகளிர் பிரிவுக்கான 3,000 மீட்டர் ரிலே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் லக்சித்தா, பிரகதி, சரிதா ஸ்ரீ, ருத்வா ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்றது.

பந்தய தூரத்தை 4 நிமிடம் 34.659 வினாடிகளில் கடந்த இந்திய அணி, மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. உலக ஸ்கேட்டிங் ரிலே போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

கொலம்பியா அணி 4 நிமிடம் 22.116 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. ஈக்வடார் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

இதற்கிடையே, சீனியர் ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் இத்தாலியின் மார்சிலி 1 நிமிடம் 21.918 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கம் வென்றார்.

இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் 1 நிமிடம் 21.922 வினாடிகளில் பந்தயத்தை முடித்து, வெறும் 0.004 வினாடி வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நடப்பு தொடரில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக, 500 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News