25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Apr 22, 2026

மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்.

 ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ,மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன் னோட்டமாக களிமண் தரையில் நடக்கும், இந்தபோட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண் டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). முசெட்டி (இத்தாலி), கேமரூன் நோரி (இங்கிலாந்து), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் கால் பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோ விச் ஆகியோர் விலகியுள்ளனர். நேற்று இதன் பெண்கள் பிரிவு போட்டி தொடங்கி விட்டது.நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினாரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக், கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஒலிம்பிக் சாம்பிய னான சீனாவின் கின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, உக்ரைனின் ஸ்விடோலினா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆட உள்ளனர்.மொத்த பரிசுத்தொகை இப் போட்டிக்கு ரூ.90கோடி யாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 

Apr 22, 2026

'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் அல்காரஸ், சபலென்காவுக்கு …

 'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் ,ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று முன் தினம்  இரவு இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ,வெகுவிமரிசையாக நடந்தது. கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், அமெ ரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில்,  2-வது இடத்தில்  இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சிறந்த வீரர் விருதையும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றிய ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றனர்.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பிரான்ஸ்) சிறந்த அணி விருதை வென்றது. 

Apr 21, 2026

MUMBAI -  GUJARAT- 20 APRIL 2026 IPL CRICKET

  30 - வது லீக் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் நேற்று ஆமதாபாத்தில் மோதின.  டாஸ் ஜெயித்த  குஜராத் அணி  கேப்டன் சுப்கில்  பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 199 ரன் எடுத்தது. திலக் வர்மா 101 ரன் எடுத்தார். குஜராத் அணி 15.5 ஓவரில் 100 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது. 

Apr 20, 2026

PUNJAB – LUCKNOW-19 APRIL 2026 IPL CRICKET.

29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி  லக்னோ அணிகள் நியூசண்டிகாரில் நேற்றிரவு மோதின . 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்  பீல்ட்ங் தேர்வுசெய்தார். லக்னோ  அணி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

Apr 20, 2026

KOLKATTA - RAJASTHAN -19 APRIL 2026 IPL CRICKET.

28-வது லீக் ஆட்டத்தில்  கொல்கத்தா, ராஜஸ்தான் அணி  நேற்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது,  ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு  155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி 19.4 ஓவர் களில் 6 விக்கெட்டுக்கு 161 ரன் கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Apr 20, 2026

இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி 8% புள்ளிகளுடன்  முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக செஸ் சாம்பியன் ஷிப்பில்  ஆட உள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி ,சைப்ரஸ்நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் 8% பபுள்ளிகளுடன்  முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற அவர் ஆண்டின் இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூவென் ஜூனுடன் மோத உள்ளார்.இந்த நிலையில் 24 வயதான ஆர். வைஷாலி நேற்று அதிகாலை சென்னை திரும்பி னார். விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி, மற்றும் செஸ் சங்கம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. அகில இந்திய செஸ் சம்மேளன தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஏ.கே. வர்மா வைஷாலியை நேரில் வர வேற்று கூறுகையில், 'உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிப்போம். இதற்காக முறைப்படி விண்ணப்பிப்போம். இரண்டு இந்தியர்கள் (ஆண்கள் பிரிவில் குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி) உலக செஸ்சாம்பியன்ஷிப்பில் ஆட இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.

Apr 18, 2026

GUJARAT - KOLKATTA - 17 APRIL 2026 IPL CRICKET.

கொல்கட்டா, குஜராத் அணிகள் நேற்று ஆமதாபாத்தில் உள்ள  மோடி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின. கொல்கத்தா  அணி கேப்டன் ரகானே, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 180 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது.  குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

Apr 18, 2026

சென்னை அணி . ஐ.எஸ்.எல். கால்பந்தில் 2-வது வெற்றி .

12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 14 அணிகள் இடையிலான தொடரில் சென்னை நேருஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை எதிர்கொண்டது.சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை  வென்றது. பாருக் சவுத்ரி (II-வது நிமிடம்) வெற்றிக்கான கோலை அடித் தார்.சென்னை அணிக்கு ,8-வது ஆட்டத்தில் ஆடிய 2-வது வெற்றியாகும்.டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 

Apr 17, 2026

MUMBAI - PUNJAB  - 16 APRIL 2026 IPL CRICKET.

மும்பை அணி, பஞ்சாப் அணி, நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி ,20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Apr 17, 2026

தமிழக வீராங்கனை வைஷாலிகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதி.

சைப்ரஸ் நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.  இதன் 14-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷியாவின் கேத்ரினா லாக்னோவை தோற்கடித்த வைஷாலி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ரூ.31 லட்சம் பரிசுத் தொகையைதட்டிச்சென்றார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற வைஷாலி, ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பி யன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென் ஜூனுடன் மோதும்வாய்ப்பை பெற்றுள்ளார். சாதனை படைத்த 24 வயதான வைஷாலி நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார். 5 முறை உலகசாம்பியனான செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டியுள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதிபெற்றதன்மூலம் கனவு நனவாகி இருப்பதாக கூறியுள்ளார்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 158 159

AD's



More News