17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை , சீனாவின் சுஜு நகரில், 10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'டாப்-6' இடம் பெறும் அணிகள், தொடரின் முடிவில், வரும் அக். 17-நவ.7ல் மொராக்கோவில் நடக்க உள்ள 17 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்தில், பங்கேற்க தகுதி பெறும். முதன் முறையாக 21 ஆண்டில், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றது. தனது மூன்றாவது, கடைசி போட்டியில்நேற்று லெபனானை சந்தித்தது. முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 21 ஆண்டு ஆசிய கோப்பை (17 வயது) அரங்கில், இந்தியா பெற்ற முதல் வெற்றி.
50 வது லீக் போட்டியில் நேற்று லக்னோ பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. லக்னோ அணி 19 ஓவரில் 209/3 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி 19 ஓவரில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் லக்னோ அணி முதல் இடத்தில் உள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 2) நடந்து வரூகிறது.பெண்கள் ரிகர்வ் அணிகள் பிரிவின் அரை இறுதியில் இந்திய அணி, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான, தென்கொரியாவை சந்தித்தது. இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும்மோஹோட்ஆகியோர்அடங்கியஇந்தியஅணி 5-1 என்றகணக்கில்தென்கொரியாவைவீழ்த்திஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.இறுதிப்போட்டியில் 2-ம் நிலைஅணியான சீனாவுடன் மோதுகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் நேற்று 49வது லீக் ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில், 202/7 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.
சென்னை, டெல்லி அணிகள்,நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணி 20 ஓவரில், 155/7 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 17.3 ஓவரில் 159/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 87 ரன்கள் எடுத்தார்.
'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் சுவீடனின் மால்மோ நகரில், நடக்கிறது. இந்தி யாவின் அர்ஜுன் எரிகைசி ,5 முறை உலக சாம் பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், உள்ளிட்ட 8 பேர் பங்கேற் கின்றனர்.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ் தானின் நாடிர்பெக்கை ,4வது சுற்றில் எதிர்கொண்டார்.துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தில் விளையாடி,. முடிவில், 62 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் கார்ல்சன், நெதர்லாந்தின் ஜோர்டென் -பாரீஸ்ட் மோதி,. 88 நகர்த்தல் வரை நீடித்த இப்போட்டி யில், கார்ல்சன் தோல்வியடைந்தார்.நான்கு சுற்று முடிவில் துருக்கியின் யாஜிஸ் (3.0) முதலிடத் தில் உள்ளார். உஸ்பெ கிஸ்தானின் நாடிர்பெக், அர்ஜுன் தலா 2.5 புள் ளியுடன் அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
மும்பை, லக்னோ அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற, மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்ட்ங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த, லக்னோ அணி 20 ஓவரில் 228/5 ரன்கள் எடுத்தது. மும்பை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பைக்கு இது 3-வது வெற்றியாகும். லக்னோவுக்கு 7-வது தோல்வியாகும்.
கொல்கத்தா, ஹைதெராபாத் அணிகள்நேற்று மாலை ஹைதெராபாத்தில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது . கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத், பஞ்சாப் அணிகள், நேற்று ஆமதாபாத்தில் நடந்த போட்டியில், மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 163/9 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 19.5 ஓவரில் 167/4 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், இந்தியா ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ,தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. காயம் காரணமாக லக்ஷயா சென் ஆடவில்லை. மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோல்வி அடைந்தனர். முடிவில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்தியா வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.