லீக் போட்டிநேற்று, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. சென்னை அணி 18.1 ஓவரில் 160/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
.டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின்முடிவில்இந்தியஅணி 3-0 என்றகணக்கில்சீன தைபேயை வென்று அரைஇறுதிக்குமுன்னேறியது.வெண்கலப்பதக்கத்தை உறுதிசெய்தது.இந்திய வீரர் லக்ஷயா சென்முதலாவது ஒற்றையர் ஆட்டத்தின், சரிவில் இருந்து மீண்டு வந்து 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரான சோய் டிம் சென்னை (சீன தைபே) வென்றார்.இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணைந்து, அடுத்துநடந்த இரட்டையர் ஆட்டத்தில் 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சியுஹிசாங்சிக்- வாங்சிலின் (சீன தைபே)ஜோடியை வென்றனர். இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் 8-ம் நிலை வீரரான லின் சுன் யியை (சீன தைபே). இந்திய அணி, அரை இறுதியில் ,பிரான்ஸ் அல்லது ஜப்பானை சந்திக்கும்.
ராஜஸ்தான், டில்லி அணிகள்நேற்று ஜெய்ப்பூரில் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 225/6 ரன் எடுத்தது. டெல்லி அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டென்மார்க்கின் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் ,ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட் மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த சீனா, இந்தியா (ஏ பிரிவு), ஜப்பான், மலேசியா (பி). சீன தைபே, டென்மார்க் (சி), தாய்லாந்து, பிரான்ஸ் (டி) கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சீனா-மலேசியா, தாய்லாந்து-டென்மார்க், பிரான்ஸ்-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ,ஆண்கள்பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில், பெல்ஜியத் தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியனான கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) அதிர்ச்சி அளித்தார். மற் றொரு ஆட்டத்தில் ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜிரி லெஹக்காவை (செக்குடியரசு) வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா ,பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதியில் ,6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பாப்டிஸ்டை (அமெரிக்கா) தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதியில் உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் லின்டா நோஸ்கோவை (செக்குடியரசு) வென் றார். கோஸ்ட்யுக் அரை இறுதியில் அனஸ்டசியா போட்டா போவாவை (ஆஸ்திரியா) எதிர்கொள்கிறார்
42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் நேற்றிரவு ஆமதாபாத்தில் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பெங்களூருஅணி 19.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது,குஜராத்அணி 15.5 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .
சமோவா நாட்டின் அபியா நகரில், காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. 2-வது நாளில் 4 தங்கம் வென்ற,இந்தியா 3-வது நாளிலும் பதக்க வேட்டையை தொடர்ந்தது. இந்திய வீராங்கனை பெல்லானா ஹரிகா ,பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாட்ச் முறையில் 86 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 111 கிலோவும் என மொத்தம் 197 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். கரங்கி தரங்கினி, பூமிகா மோஹிதே இந்தியர்கள் (63 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.இந்திய வீரர் அபிஷேக் நிப்பானே சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 88கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 324கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார்
41-வது லீக் ஆட்டத்தில், மும்பை, ஹைதெராபாத் அணிகள் ,மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின. டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ,முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்தது. ஹைதெராபாத் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதெராபாத் அணிக்கு இது 6 வது வெற்றியாகும்.
ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின்கேமரூன் நோரியை வென்றுகால் இறுதியை எட்டினார்.ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும், மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி. மற்றொரு ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வெளியேற்றினார்.கால் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் நடந்த 8-ம் நிலை வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை (கனடா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
சமோவா நாட்டின் அபியா நகரில் காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய வீரர் சுனில் சிங் 2-வது நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' முறையில் 126 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 145 கிலோ என மொத்தம் 271கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் அபினோப் கோகோய் 71கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 284 கிலோ (ஸ்னாட்ச்-129, கிளீன் அண்ட் ஜெர்க்-155) எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை அய் சங்பா கோகோய் பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 185 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-79, கிளீன் அண்ட் ஜெர்க்-106) தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இந்திய வீரர் சாரு பேசி சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 65கிலோ எடைப்பிரிவில் 289 கிலோ எடைதூக்கி (ஸ்னாட்ச்-127, கிளீன் அண்ட் ஜெர்க்-162) தங்கப் பதக்கம்வென்றார்.