25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விளையாட்டு (SPORTS)

Jul 12, 2024

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஆலோசகராக பிரகாஷ் படுகோன் நியமிக்கப்பட்டார்

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஆலோசகராக பிரகாஷ் படுகோன்நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவர், சிந்துவின் ஆலோசகராக உள்ளார். இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் , ''நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று நினைக்கவில்லை. பாரிஸ் போட்டி எனது கடைசி ஒலிம்பிக்காக இருக்கும்," என்றார்

Jul 11, 2024

ஹங்கேரியில் நடந்த சர்வதேச தடகள  போட்டியில் பருல் சவுத்தரி 6வது இடம்

இந்திய வீராங்கனை பருல் சவுத்தரி ஹங்கேரியில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் (9 நிமிடம் 35.66 வினாடி) 6வது இடத்தை கைப்பற்றினார்.

Jul 10, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சி யாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சி யாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டார்.'டி-20' உலக கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியில், இந்திய அணி சாம்பியன் ஆனது. இத்தொடருடன் இவரது பதவிக்காலம் முடிந்தது. புதிய பயிற்சியாளருக்காக முன்னாள் வீரர்கள் கவுதம் காம்பிர், டபிள்யு. விராமனிடம் நேர்காணல் நடந்தது.நேற்று புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பிர் , நியமிக்கப்பட்டார்  'டி-20' உலக கோப்பை தொடரில் மிரட்டிய பும்ரா, ஐ.சி.சி.,சிறந்த வீரராக (கடந்த ஜூன் மாதத்திற்கான) தேர்வானார். சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் மந்தனா தேர்வு. 

Jul 09, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு கொடி கவுரவம்

ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுடன் இணைந்து, பாட்மின்டன் வீராங்கனை சிந்துவும் ஏந்தி வரவுள்ளார். முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், இந்திய குழுவுக்கு தலைவராக அறிவிக்கப்பட்டார்.உலக சாம்பியன்ஷிப் உட்பட தொடர்ச்சியாக 4 தங்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா கூறுகையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

Jul 08, 2024

பாரிஸ் ஒலிம்பிக் ஜெஸ்வின், அன்கிதா தரவரிசை அடிப்படையில் தகுதி

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜெஸ்வின், அன்கிதா  தரவரிசை அடிப்படையில் தகுதி .பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ('டிரிபிள் ஜம்ப்', 33வது இடம்), அன்கிதா (5000மீ., ஓட்டம், 96வது இடம்) 'ரேங்கிங்' அடிப்படையில் தகுதி.

Jul 06, 2024

ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜீலை 26 முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை) நடக்க உள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் 21, தடகளத்தில் 28பேர், உட்பட சுமார் 120 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021-ல் இந்தியா 7 பதக்கம் வென்றது. இம்முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் பெறும் இலக்கில் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களிடம் நேரடியாகாவும், வீடியோ கான்பரசிங் மூலமாகவும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.ஒலிம்பிக் என்பது கற்றுக் கொள்ளவதற்கான சிறந்த களம். உலகின் பெரும் விளையாட்டு திருவிழா என்பதால் கவனச் சிதறல் ஏற்படலாம். திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படுத்துங்கள். உங்களது வாழ்க்கையின் வெற்றிப் பயணம் 140 கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று  கூறினார்.

Jul 05, 2024

T20 உலக சாம்பியன்கள் கொண்டாட்டம்

உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு கேப்டன் ரோகித் சர்மா முதலில் இறங்கினார். லேசாக மழை பெய்தபோதும், ரசிகர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இரண்டு பஸ் மூலம் மவுரியா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். நுழைவுவாயிலில் மேளதாளம் முழங்க, பாரம்பரிய 'பாங்கரா' நடன கலைஞர்கள் வரவேற்றனர்.பிரதமர் மோடியின் வீட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்டோர் காலை 11 மணிக்கு சென்றனர். இவர்களுடன் உணவு சாப்பிட்ட மோடி, உலக கோப்பை அனுபவங்களை கேட்டறிந்தார். பைனலில் ஒவ்வொரு 'ஷாட்' குறித்தும் அறிந்து வைத்திருந்தார். சூர்யகுமாரின் கலக்கல் கேட்ச் உட்பட அனைத்து அம்சங்களையும் ஆர்வமாக கேட்டார்.T20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று மைதானத்தில் இதற்கான 'செக்' வீரர்களிடம் வழங்கப்பட்டது.

Jul 04, 2024

ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய வீரர்கள்

2021 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ரா, அவினாஷ் சபிள் (ஸ்டீபிள் சேஸ்) உள்ளிட்டோர் பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் போட்டியில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.தமிழகத்தின் டிரிபிள் ஐம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், உலகளவில் 23வது இடம் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். 2022 பர்மிங்காம் காமன் வெல்த் விளையாட்டில் 17.02 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி வென்ற டிரிபிள் ஐம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், 21வது இடம் பிடித்து, ஒலிம்பிக் தகுதி பெற்றார். இருவரும் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு, பைனலுக்கு முன்னேறுகின்றனர்.ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி, 60 கிலோ மீட்டருக்கும் மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என கடந்த 2017-ல் சாதித்தார் 2023 ஆசிய விளையாட்டில், 62.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார். இவர், உலகத் தரவரிசையில் 21வது இடம் பெறு, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.இதுதவிர குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (23 வது இடம்) வீராங்கனை அபாகதுவா (23வது இடம்) 100 மீட்டர் தடை ஓட்ட வீராங்கனை ஜோதி (34 வது இடம்) 5000 மீட்டர் ஓட்ட வீராங்கனை பாருல் சவுத்ரி (34வது இடம்) உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் (23 வது இடம்) தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Jul 02, 2024

லியோன் மாஸ்டர்ஸ் செஸ் பைனல் 10 வது முறையாக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த்

லியோன் மாஸ்டர்ஸ் செஸ் பைனல் ஸ்பெயினில் நடந்தது.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3-1 என ஸ்பெயினின் ஜெய்ம் சான்டோஸ் லடாசாவை வீ ழ்த்தி 10 வது முறையாக சாம்பியன் ஆனார்

Jul 01, 2024

T20 உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஜீன் 29-ம் தேதி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

29-ம் தேதி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 176/7, வித்தியாசத்தில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169/08, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VIRAT KOHLI தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 32 33

AD's



More News