மாற்றுத்திறனாளி களுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12') பைனலில், பந்தய துாரத்தை 24.46 வினாடியில்கடந்த இந்தியாவின் சிம்ரன் சம்ரா, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். இவர், 100 மீ., ஓட்டத்தில் ('டி12') தங்கம் வென்றிருந்தார். இந்தியாவின் பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி35') பைனலில் இலக்கை 14.33 வினாடியில் கடந்தவெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இம்முறை 200 மீ., ஓட்டத்தில் ('டி35') வெண்கலம் வென்ற இவர், உலக தடகளத்தில் தனது 4வது பதக்கத்தை பெற்றார் இந்தியாவின் நவ்தீப் சிங், ஆண்களுக்கானஈட்டி எறிதல் ('எப்41') பைனலில், அதிகபட்சமாக 45.46 மீ., எறிந்து வெள்ளி வென்றார். இது, உலக தடகளத்தில் இவரது 2வது பதக்கம் ஆனது.. இந்தியாவின் சந்தீப் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('டி44') பைனலில், இலக்கை 23.60 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.உலக பாரா தடகளம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் அபிஷேக் சர்மா ICC, T-20 தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் 7 இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்து, T-20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிஷேக் முறியடித்தார்.
நார்வேயின் போர்டேநகரில்உலகபளுதுாக்குதல்சாம்பியன்ஷிப் நார்வேயின் போர்டேநகரில், 87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள் 87 பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டியில்வெள்ளி வென்ற மீராபாய் சானு 31,உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.மீராபாய் சானு முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ தூக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ தூக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒரு பக்கம் அனுபவ மில்லா, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதும் தொடர்ந்தது.கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். அடுத்து களம் இறங்கிய ராகுல் 100 ரன்னும், ஜுரல் 125, ரன்னும், ஜடேஜா 104 ரன்னும் எடுத்து மூன்று சதத்தை கொண்டாடினர். 286 ரன் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்தது.விரைவாக ரன் சேர்த்தால், இன்று இந்திய பேட்டர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) பைனல் நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன் வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது. இந்தியாவின் நிஷாத் குமார் (டி 47, வலது கை பாதிப்பு ) ஆண்களுக்கான (2.14 மீ.,) உயரம் தாண்டுலில் தங்கம் வென்றார். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான (டி 35) 200 மீ., ஓட்டத்தில் (30.03 வினாடி), இந்தியாவின் பர் தீப் குமார் (46.63 மீ.,), ஆண்க ளுக்கான வட்டு எறிதலில் (எப் 64) வெண்கலப் பதக்கம் வென்றனர். உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது. இதுவரை இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
புனே அணி, சென்னையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூருவை 'டை பிரேக்கரில்' வீழ்த்தியது.தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு டில்லியில் ,அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் கான்பெராவில், இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சட்டீஸ்கரில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.இரட்டையர் பிரிவு சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன் சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முதன்முறையாக ஆசிய ‘அக்கு வாடிக்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நடக்கிறது. 200 மீ., 'பட்டர் பிளை' பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டி பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 57.90 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெண்கலம் வென்றார்.100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு ஆண்களுக்கான நீச்சல், பைனலில் பந்தய தூரத்தை 55.23 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 3வது பதக்கம் வெண்கலம். வென்றார்.ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் தாஸ் (56.24 வினாடி) 4வது இடம் பிடித்தார். 13 பதக்கங்கள் வென்ற இந்தியா, இதுவரை 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (38 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில்,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற் றார். இலக்கை 12.13 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று அரையிறுதி நடக்கிறது.இந்தியாவின் ஷர்மிளா பெண்களுக்கான குண்டு எறிதல் (‘எப்57') பைனலில் பங்கேற்றார். அதிகபட்சமாக 10.03 மீ., குண்டு எறிந்த இவர், 5வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அமிஷா ரவாத்,குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடி 10.11 மீ., எறிந்து 9வது இடம் பிடித்தார். இந்தியா சார்பில் ஹேனி ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் களமிறங் கினார். அதிகபட்சமாக 51.22 மீ மட்டும் வட்டு எறிந்த இவர், 4வது இடம் பிடித்தார்.
நேற்று துவங்கிய கிரிக்கெட் முதல் டெஸ்டில் ஆமாதாபாத் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண் டீஸ் கேப்டன் ராஸ்டன் சேஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவரில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் மட்டும் பின்தங்கியிருந்தது. ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று இந்திய பேட்டர்கள் கைவசம் ,8 விக்கெட் இருக்கும் நிலையில், விளையாடி, வலுவான ஸ்கோரை எட்டலாம்.
இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று துவங்குகிறது.அணியில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ரோகித், கோலி, சுழல்ஜாம்பவான் அஷ்வின் ஓய்வு பெற்று விட்டனர்.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் செயல்பட சிறப்பாக காத்திருக்கின்றனர் புதிய கேப்டன் சுப்மன் கில், தலைமையில் இந்திய அணி, வழக்கம் போல ஆதிக்கம்செலுத்துகிறது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் (2-2) செய்தது.