சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்) அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின்யுடோநோடா, ஷுன்யாஓடாஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 21-13,. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-1 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.இந்தியவின் ஹரிஹரன் அம்ச கருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை கலப்பு இரட்டைய பிரிவு பைனலில் சந்தித்தது. இந்திய ஜோடி 52 நிமிடம் நடந்த பைனலில் 21-14, 18– 21, 21-11 என வென்று கோப்பை வென்றது.
சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் பி.எஸ்.ஏ., தொடர் ஜப்பானில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 117வது இடத்திலுள்ள இந்தியாவின் 39 வயது ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்துபெற்ற எகிப்தின் ஹயா அலியை எதிர் கொண்டார்.முதல் செட்டில் 11-5 , 2 வது செட்டில் 11-9 , ஜோஷ்னா,மூன்றாவது செட்டில் ஹயா அலி (11-5) வென்றார். 4வது செட்டை ஜோஷ்னா 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார்.போட்டியி ன் முடிவில் ஜோஷ்னா 3-1 (11–5,11-19, 5-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
பெண்களுக்கான இந்தியன் ஓபன் கோல்ப் தொடர் ஹரியானாவில் நடந்தது.இந்தியாவின் ஹிட்டாஷீபக்சி, 283 'ஸ்டிரோக்' பெற்று, மூன்றாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனவி (284) 4வது இடம் பெற்றார். சிங்கப்பூரின் ஷனான் (281), இங்கிலாந்தின் அலைஸ் (282) முதல் இரு இடம் பெற்றனர்.பிரைம் வாலிபால் லீக், நான்காவது சீசன் இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டி யில் ஆமதாபாத் அணி 3-2 என்ற (9:15, 7:15, 15:9, 15:11, 15:8) கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டில்லி அணி 3-0 என (15:11, 15:9, 15:11) கேரளா (கோழிக் கோடு) அணியை வென்றது. இன்று ஓடென்ஸ் நகரில் டென்மார்க்ஓபன் பாட்மின்டன் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பெண்கள் ஒற்றையரில்அன்மோல், ஆண்கள் இரட்டையரில் ச சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகின்றனர்.
சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஜப்பானில், பெண்கள் ஒற்றை யர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நார்டைன் கராஸ் மோதினர். சிறப்பாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11–8, 15-13, 11–9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்குள் நுழைந்தார். எகிப்து வீராங்கனை ராணர் இஸ்மாயிலை ஜோஷ்னா, எதிர் கொள்கிறார்.
ஓபன் ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவில், சிலிக்கான் வேலியில் ,முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார். இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்றுப் போட்டியில் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல்டோர்கியிடமும் , இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தனர்.
மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ,சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசனில் . 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் (2வது நிமிடம்), சுனில் (15வது அராய்ஜீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து ,முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இந்தியாசார்பில் ரோமன் குமார் (47வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ,2வது வெற்றியை பதிவு செய்தது.
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அசாமின்கவுகாத்தியில், (தனிநபர், இரட்டையர்) இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் இந்தியா சார்பில் அபிஷேக் பால் (1:04.17), 8 (1:11.23) முதலிடம் பிடித்தனர்.கென்யாவின் அலெக்ஸ் மடாடா (59.50 நிமிடம், ஆண்கள்), லிலியன் கசாய்ட் ரெங் கெருக் (1:07.20, பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 'ஸ்கீட்' பிரிவில்ஏதென்சில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான், 16வது இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், 38வது இடம் பிடித்தார்.ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில், பெண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் 8வது இடம் பிடித்த இந்தியா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.சென்னை வேளச்சேரியில் நடந்து வரும்தொடரின் 11-வது நாளான நீச்சல்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் செங்கல்பட்டை சேர்ந்த கவீன்ராஜ் 16 நிமிடம் 54.97 வினாடிகளில் இலக்கைகடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். சென்னை வீரர் சாய் கணேஷ் வெள்ளிப்பதக்கமும், நெல்லை வீரர் லியோனர்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 100 மீட்டர் பட்டர்பிளையில் ரோகித்பெனிடிக்சன் (செங்கல்பட்டு), 100 மீட் டர் பிரீஸ்டைல் ஜாஷூவா தாமஸ் (சென்னை) நிதிக் நாதெல்லா (செங்கல்பட்டு), 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக்கில் சுதேஷ் குமார் (செங்கல்பட்டு), ஆகியோர் இதன் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ,தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ் தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுமுடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன்,'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில்இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்குமேல்எடுத்தமுதல்அணிஎன்றபெருமையைஇந்தியாபெற்றது. ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில், ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றரர். முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ தூக்கிய இவர், கடைசி வாய்ப் பில் 147 கிலோ தூக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை வென்றார்.