25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jun 08, 2026

தெற்காசிய பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியில் 6-வது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது .

கோவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது.இந்தியா இக்கோப்பையை வெல்வது இது 6-வது முறையாகும். இந்திய அணியில் பியாரி சசா, சான்பிதா, லின்டா கோம் ஆகியோர் கோல் அடித்தனர்.

Jun 08, 2026

ஆசிய செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் தங்கப்பதக்கம் வென்றார்.

மங்கோலியாவில் நடந்த ஆசிய பெண்கள் தனிநபர் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் தங்கப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் அவர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை செஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jun 08, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி,இந்திய இளம் அணி 'சாம்பியன்'.

ஜப்பானில் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.ஆஷிஷ் தானி புர்தி 3 கோல்களும், கேப்டன் கேதன் குஷ்வஹா 1 கோலும் அடித்தனர். இந்தியா இதற்கு முன் 2001, 2016 ஆகிய ஆண்டுகளிலும் இக்கோப்பையை வென்றுள்ளது.

Jun 08, 2026

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மிரா ஆன்ட்ரீவா முதல்முறை சாம்பியன்.

பாரீசில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் 19 வயது இளம் வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் மஜா சாலின்காவை வீழ்த்தி முதல்முறையாக 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார். 1992-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற மிக இளம் வீராங்கனை என்ற சிறப்பை ஆன்ட்ரீவா பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஆன்ட்ரீவாவிற்கு ₹31 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த சாலின்காவிற்கு ₹15.5 கோடியும் பரிசாகக் கிடைத்தது. இந்த முன்னேற்றத்தின் மூலம் சாலின்கா உலக தரவரிசையில் 114-ல் இருந்து 21-வது இடத்திற்கு முன்னேறுகிறார்.

Jun 08, 2026

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதன்முறையாக சாம்பியன்.

பாரீசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் பிளவியா கோபோலியை (14-ம் நிலை வீரர்) எதிர்கொண்டார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றியதால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது.சுமார் 4 மணி 16 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில், ஸ்வெரேவ் 6-1, 4-6, 6-4, 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.2015 முதல் விளையாடி வரும் 29 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வெரேவுக்கு ரூ. 31 கோடியும்,இரண்டாம் இடம் பிடித்த கோபோலிக்கு ரூ. 15.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Jun 06, 2026

நார்வே சர்வதேச செஸ்தொடரின் 9வது சுற்றில் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

நார்வேயில் நடைபெறும் சர்வதேச செஸ் தொடரின் 9வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் குகேஷை 34 நகர்த்தல்களில் வீழ்த்தினார். இது தொடரில் பிரக்ஞானந்தா பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றியாகும். மற்றொரு போட்டியில் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லே சோவிடம் தோல்வியடைந்தார்.9 சுற்றுகளின் முடிவில் வெஸ்லே சோ (15.5 புள்ளி) முதலிடத்திலும், பிரக்ஞானந்தா (15.0 புள்ளி) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் (8 புள்ளி) கடைசி இடத்தில் உள்ளார்.

Jun 06, 2026

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.

பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஜாகுப் மென்சிக்கை வீழ்த்தினார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தின் மூலம், ஸ்வெரேவ் 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Jun 06, 2026

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர் இன்று துவக்கம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று பஞ்சாபில் துவங்குகிறது. புதிய சண்டிகர் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களம் காண்கிறது. இரு அணிகளும் கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

Jun 05, 2026

பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!

பெண்கள் ஒற்றையர்: பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்.கலப்பு இரட்டையர்: இத்தாலியின் சாரா இரானி - ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் கனடா-அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது இவர்களது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Jun 05, 2026

பிளாஷ்பேக் 2010: முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்!

தென் ஆப்ரிக்காவில் நடந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகள் ஏமாற்றின.விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. கூடுதல் நேரத்தின் 116வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த அபார கோலால், ஸ்பெயின் 1-0 என நெதர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனது.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 171 172

AD's



More News