சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் இரட்டையர் காலிறுதியில்இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரிப் ஜூனைதி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர் கொண்டது. சிராக்முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-23 என போராடி இழந்து, மூன்றாவது கடைசி செட்டை இந்திய ஜோடி 21-16 என வென்றது.64 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
உஸ்பெகிஸ்தானில்'கிராண்ட்சுவிஸ்' செஸ்தொடரில் 'டாப்-2'இடம்பெறும் வீரர், வீராங்கனைகள்,2026ல்நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.நேற்று எட்டாவது சுற்று போட்டி நடந்தன. ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா என இருவரும் மோதினர்.குகேஷ், 46 நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் நீடித்தனர்.47 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, திவ்யா முந்தினார். 103வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 'ரிகர்வ்' பிரிவு 'ரவுண்டு - 16' தென் கொரியாவில் நடந்த போட்டியில் இளம் இந்திய வீராங்கனை கதா (15 வயது), 0-6 என்ற கணக்கில் உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் லிம் சி-ஹியோனிடம் தோல்வியடைந்தார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு சீனாவில்நடக்கும் தகுதிச் சுற்றில் 6வது இடம்பிடித்த இந்தியாவின் பவேஷ் ஷெகாவத், பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' சீனாவில் நடக்கும் போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன . இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில்,பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் சத்யன் ஞானசேகரன், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 4–1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என மேற்கு வங்கத்தின் அங்கூரை வென்று சாம்பியன் ஆனார்.ரிசர்வ் வங்கி அணியின் தியா, பெண்கள் ஒற்றையர் பைனலில் ரயில்வே அணியின் சுதிர்தாவை 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.தமிழகத்தின் ஹன்சினி 'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2. இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சீனாவின் குவோ குயியை சந்தித்தார். வைஷாலி, 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 7 சுற்று முடிவில் 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர்.திவ்யா, செர்பிய வீரர் வெளிமிர் இவிச்சை சந்தித்த திவ்யா, 49வது நகர்த்தலில் வென்றார்.மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் மேக்சிமை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால்சரின், ஈரானின் பர்ஹாமை வென்றார்.7 சுற்று முடிவில் ஜெர் மனியின் மத்தியாஸ் (5.5), நிஹால் சரின் (5.5) முதல் இரு இடத்தில் உள்ளனர்.
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று, அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஹாங்காங்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. வங்கதேச அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் ('நம் பர் -34), லக்சயா சென் ('நம்பர்-20') மோதினர்.முதல் செட்டை பிரனாய் 21-15 என கைப்பற்றினார். பின் நடந்த இரண்டாவது செட்டை லக்சயா 21-18 என வென்றார். மூன்றாவது, கடைசி செட்டிலும் லக்சயா (21-10) முடிவில் 15-21, 21-18, 21-10 என போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் ,இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள்பங்கேற்கின்றனர்.பெண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, போலந்தின் எமிலியா கோடர்ஸ்காவை சந்தித்தார்.இருவரும் சம பலத்தில் மோதி, பூஜா 3-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மமஜொனோ வாவை ,இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ), எதிர்கொண்டார்.ஜாஸ்மின், 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.நுபுர் ஷியோரன், பூஜா, ஜாஸ்மின் என மூன்று வீராங்கனைகள் குறைந்த பட்ச பதக்கத்தை உறுதி செய்தனர்.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து சவுதி அரேபியாவில், 7வது சீசன் (2026, ஜன. 7-25) தகுதிச் சுற்றில், 44 அணிகள், 11 பிரிவுகளாக பங்கேற்றன.'எச்' பிரிவு லீக் போட்டி யில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்தியா, புருனேஅணிகள் மோதின. இந்திய அணிக்கு விபின் மோகனன், (5, 8, 62வது நிமிடம்)கோல் அடித்தார். முகமது அய்மன் (87, 90+7) இரண்டு கோல் அடித்தார். ஆயுஷ் தேவ் செத்ரி (42) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், உஸ்பெகிஸ்தானின் சோடிம்போயவா ஆல்டினாயை ,நுபுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து உலகசாம்பியன் ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.இந்திய வீரர் ஜடுமானி, 'ரவுண்டு-16' போட்டியில் பிரிட்டனின் ரீஸ் ரெட் ஷாவை ஜடுமானி 5-0 என்ற கணக்கில் ஒரு மனதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இந்திய வீராங்கனை மீனாட்ஷி 48 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் ,5-0 என சீனாவின் வாங் குயு பிங்கை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.