25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


காமன்வெல்த் விளையாட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் விளையாட்டு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது.

ஜூடோ

நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்மிதா தே, ஸ்காட்லாந்தின் சம்மர் ஷாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் கனடாவின் ஹெய்தியை எதிர்கொண்ட அஸ்மிதா, நிர்ணயிக்கப்பட்ட 4 நிமிட முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க கோல்டன் ஸ்கோர் முறை பின்பற்றப்பட்டது. இதில் முதல் புள்ளி பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

கோல்டன் ஸ்கோர் முறையில் ஹெய்தியை கீழே தள்ளி ஒரு புள்ளி பெற்ற அஸ்மிதா, 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் ஜூடோ வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ச்வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹர்ஷ் சிங் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

பளுதூக்குதல்

ஆண்களுக்கான +110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் பங்கேற்றார்.

முதலில் நடைபெற்ற ஸ்னாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ 166 கிலோ எடையுடன் 2-வது இடத்தில் இருந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியிலேயே 205 கிலோ எடையைத் தூக்கிய லவ்பிரீத் சிங் தங்கத்தை நோக்கி முன்னிலை வகித்தார். ஆனால் நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ தனது 2-வது முயற்சியில் 223 கிலோ எடையைத் தூக்கி மொத்தம் 389 கிலோவுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மொத்தம் 388 கிலோ எடை தூக்கிய லவ்பிரீத் சிங் ஒரு கிலோ வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

குத்துச்சண்டை

நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை அரையிறுதி போட்டிகளில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, ஜாம்பியாவின் கேத்தரின்வை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்குஷ், கனடாவின் ஜோஷுவாவை 5-0 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

55 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜடுமானி சிங், நமீபியாவின் பிலிப்வை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News