25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Sep 11, 2025

ஆசிய கோப்பை 'டி-20'  கிரிக்கெட் தொடர் இந்திய அணி வெற்றி ..

ஆசிய கோப்பை 'டி-20'  கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியா, இலங்கை உட் பட 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலக சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார். 13.1 ஓவரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 57 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 4.3 ஓவரில் 60/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Sep 10, 2025

விளையாட்டு போட்டிகள் பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்.

கலப்பு இரட்டையர் வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-12, 21-11 என்ற நேர் செட்டில் இந்தியாவின்இஷான், ஆராதனா ஜோடியை வென்றது.ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்சீனாவின் குவாங்சுவில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்,1-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிதேஷிடம் வீழ்ந்தார். டில்லியில் தேசிய டேபிள் டென்னிஸ் தொடர் இன்று ஆண்கள் பிரிவில் 256 பேர் பங்கேற்க உள்ளனர். தேசிய சாம்பியன் மனுஷ் ஷா விலகியதை அடுத்து, அன்குர் பட்டாச்சார்ஜீக்கு 'நம்பர்-1' அந்தஸ்து கொடுக்கப்பட்டது. 128 பேர் பெண்கள் பிரிவில் களமிறங்குகின்றனர். 'நம்பர்-1' வீராங்கனையாக  தியா சிட்டாலே களமிறங்குகிறார்.

Sep 10, 2025

இந்தியாவின் நிஹாத் ஜரீன் குத்துசண்டை உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறினார்.

 உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் நிஹாத் ஜரீன், ஜப்பானின்  நிஷினகா யுனாவை பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நிஹாத், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்காட்லாந்தின் ஹிக்கேயிடம்  இந்திய வீராங்கனை நீரஜ் போகத் (65 கிலோ), 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

Sep 10, 2025

'சூப்பர் 500' பாட்மின்டன்பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றார் கிரண்.

நேற்று 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் ஹாங்காங் ,ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 2021, 2024 ஒலிம்பிக்கில் தங்கம்  வென்ற சீன தைபேவின் வாங் சி லின், சியு ஹிசியன் சியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 18-21 என இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-10 என வசப்படுத்தியது. 21-10 முடிவில் இந்திய ஜோடி 21-13, 18-21, என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் 21-14, 21-13 என மலே சியாவின் செயம் ஜூன் வெய்யை வென்றார்.  இரண்டாவதுபோட்டி யில் சக வீரர் சங்கர் முத்துசாமியை 21–81, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார் கிரண்.

Sep 09, 2025

இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது.

ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப்.9-28) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. ஏ' பிரிவு: இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 'பி' பிரிவு: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங். ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.12 போட்டி முடிவில் இரு பிரிவிலும் முதலிடம் பெறும் தலா இரு அணிகள் 'சூப்பர்- 4' சுற்றுக்கு முன்னேறும்.ஒவ்வொரு அணியும், மீண்டும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை 'சூப்பர்-4' சுற்றில் மோதும். 6 போட்டி முடிவில் செப். 28ல் நடக்கும் பைனலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் மோதும்.

Sep 09, 2025

பெண்களுக்கான  ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன்.

பெண்களுக்கான  ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவில்,நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் இந்தியா 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (7 புள்ளி), ஜப்பான் (7) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தன.

Sep 09, 2025

உலகடேபிள் டென்னிஸ் சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில்இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடிவெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

 உலகடேபிள் டென்னிஸ் சார்பில் யூத் ஸ்டார் கன்டெண்டர் தொடர் வடக்கு மாசிடோனியாவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடி, சீனாவின் வாங்கி, ஜிலிங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-8 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 7-11 என இழந்தது.அடுத்த இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வென்றன. 5வது, கடைசி செட்டில் போரா டிய இந்திய ஜோடி 14-12 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என்ற கணக்கில் '' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Sep 09, 2025

மத்திய ஆசிய கால்பந்து'நேஷன்ஸ்' கோப்பை தொடர் இந்தியா வெண்கலம் வென்றது.

 தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் மூன்றாவது இடத்துக்கான போட்டியில், 133வது இடத்திலுள்ள இந்திய அணி, உலகத் தரவரிசையில் 79 வது இடத்திலுள்ள ஓமனை எதிர்கொண்டது. முடிவில் இந்திய அணி என்ற கணக்கில்வெற்றி பெற்று, இத்தொடரில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் வென்றது.

Sep 09, 2025

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில்கோப்பை வென்றார் அல்காரஸ்.

 யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்நியூயார்க்கில்,  ஆண்கள்ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, இத்தாலியின்ஜானிக் சின்னர் 24, மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 3-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என தன்வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6–2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக கோப்பை வென்றார். சாம்பியன் அல்காரசிற்கு ரூ. 44 கோடி, 2வது இடம் பிடித்த சின்னருக்கு, ரு. 22 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

Sep 08, 2025

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ,இந்தியாவுக்கு தங்கம்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தென் கொரியாவில், ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. மூன்று செட்களின் முடிவில் போட்டி 176-176 என சமநிலையில் இருந்து, நான்காவது செட்டில் ,இந்தியா 59 புள்ளி பெற்றது. பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளி கிடைத்தது. முடிவில், ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந் திய அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில், முதன் முறையாக தங்கம் வென்றது.  

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 96 97

AD's



More News