கனடாவில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவில் யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.இந்தியாவின் 16 வயது ஷர்வாரி18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில் 'நம்பர்-20', இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற தென் கொரியாவின் கிம் மின் ஜியாங்கை, 7-3 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். முடிவில் ஷர்வாரி 6-5 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.தீபிகா குமாரி (2011), கோமலிகாவுக்கு (2021) அடுத்து, 18 வயது ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷர்வாரி.இந்தியாவின் சிகிதா 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில், 142-136 என்ற கணக்கில் தென் கொரியாவின் எரின் பார்க்கை வீழ்த்தினார். யூத் உலக சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் தங்கம் கைப்பற்றிய இந்தியாவின் சிகிதா முதல் இந்திய வீராங்கனை ஆனார்.
காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நேற்று ஆமதாபாத்தில் 30 நாடுகளில் இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 48 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கினார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 31.முதலில் நடந்த 'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ எடை துாக்கினார். - அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 109 கிலோ துாக்கினார். மொத்தம் 193 எடை தூக்கிய மீராபாய் சானு, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது காமன்வெல்த் பளுதூக்குதலில் புதிய சாதனை (இதற்கு முன் 179) ஆனது.இந்தியாவின் தர்மஜோதி ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் மொத்தம் 224 கிலோ (97+127) எடை தூக்கி, தங்கப் பதக்கம். கைப்பற்றினார். தேசிய விளையாட்டு சாம்பியன் ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில், ரிஷிகன்டா, 271 கிலோ (120+151) எடை தூக்கி தங்கம் வசப்படுத்தினார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவில் போட்டி நடந்தன. அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா, ஒட்டுமொத்தம் ஆஷிமா, பிரீத்தி களமிறங்கினர். 319 புள்ளி எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர். சீனா, குவைத் அடுத்த இரு இடம் பிடித்தன.அடுத்து தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதில் துவக்கத்தில் இருந்து இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் 43 புள்ளி எடுத்த நீரு, தங்கப்பதக்கம் வென்றார். கத்தாரின் பாசில் ரே (37) வெள்ளி வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷிமா (29) வெண்கலம் கைப்பற்றினார்.25 மீ., ஜூனியர் 'பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் பயல் காத்ரி (36நாம்யா கபூர் (30), தேஜஸ் வினி (27) என மூவரும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். யூத் பிரிவில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் வென்றது.
17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் பூடானில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன்.இந்தியா, பூடான் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்து 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அனுஷ்கா குமாரி 'ஹாட்ரிக்' கோல் (53,61, 72வது நிமிடம்) அடித்தார். அபிஷ்தா 2 (23, 88 வது நிமிடம்), பியர்ல் (71வது), திவ்யானி லிண்டா (77 வது), வாலைனா (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர்.முதலிரண்டு போட்டியில் நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, 3வது வெற்றியை பதிவு செய்தது.
மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன் ஷிப் சென்னையில், ஈட்டிஎறிதலில் உ.பி.,யின் ரோகித் யாதவ் 83.65 மீ.,எறிந்து தங்கம் வென்றார்.தமிழகத்தின் கோபிகா (1.80 மீ.,) உயரம் தாண்டுதலில்தங்கத்தை தட்டிச் சென்றார். 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் தமிழகத்தின் அனுபிரியா (10 நிமிடம், 36.81 வினாடி) வெண்கலம் வென்றார். 10,000மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் லதா (36 நிமிடம், 19.07 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.யோகேஷ், சந்தோஷ், ராஜேஷ், ரமேஷ், விஷால் அடங்கிய தமிழக அணி, 4x400, மீ தொடர் ஓட்டத்தில்பந்தய துாரத்தை 3 நிமிடம், 07.53 வினாடியில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றது.ஒலிம்பாஸ்டெபி, தேசிகா, மரியா, வித்யா ராம்ராஜ் அடங்கிய தமிழக அணி 4×400 மீ., தொடர் ஓட்டத்தில் (3 நிமிடம், 38.54 வினாடி) வெண்கலம் வென்றது.195 புள்ளிகளுடன் தமிழக அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து 12வது சீசன் ஹாங்காங்கில். இதன் பைனலில் அல்நாசர், அல் அஹ்லி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அல் அஹ்லி அணி 5-3 என வெற்றி பெற்று கோப்பை வென்றது.அல் நாசர் அணியின் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இப்போட்டியில்ஒரு கோல் அடித்தார். இது, அல் நாசர் அணிக்காக ரொனால்டோ அடித்த 100வது கோல் (113 போட்டி) ஆனது.4 கிளப் அணிகளுக்காக கால்பந்து அரங்கில், தலா 100 அல்லது அதற்கு மேல் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர், 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (462.5 புள்ளி) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 'ரைபிள்-3 பொஷிஷன்' ஆண்கள் அணிகளுக்கான 50 மீ பிரிவில் ,ஐஸ்வரி பிரதாப் சிங், செயின் சிங், அகில் ஷியோரன் அடங்கிய இந்திய அணி, புள்ளிகளுடன் 1747.87 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. தனிநபர் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' ஜூனியர் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின்அட்ரியன் கர்மாகர் (463.8 புள்ளி) தங்கம் கைப்பற்றினார். மற்றொருஇந்தியவீரர் வேதாந்த் நிதின் (448.8) வெண்கலம் வென்றார்.50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் வேதாந்த் நிதின் அட்ரியன், ரோகித் கன் யான் அடங்கிய இந்திய அணி, 1733.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, இந்தியாவின் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை நீண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 7-6 என வென்றது. அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பாம்ப்ரி ஜோடி 7-6, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலியா சென்று, ஆஸ்திரே லியா 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய பெண்கள் 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 93/5 ரன் எடுத்திருந்தது. ராகவி (26), கேப்டன் ராதா (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 299 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 158/5 ரன் எடுத்து, 141 ரன் பின்தங்கி இருந்தது.
17 வயதுக்குட்பட்டபெண்களுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப் 7வதுசீசன்பூடானில்,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில்இந்திய அணி 2-0 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. நாளை மூன்றாவது போட்டியில் இந்திய அணி, பூடானை சந்திக்க உள்ளது. தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி (17 வயது), தற்போது 6 ஆண்டுக்குப் பின் நேற்று, மீண்டும் வென்றது. 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.