ஐஸ்வரி பிரதாப் சிங், ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் .
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர், 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (462.5 புள்ளி) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
'ரைபிள்-3 பொஷிஷன்' ஆண்கள் அணிகளுக்கான 50 மீ பிரிவில் ,ஐஸ்வரி பிரதாப் சிங், செயின் சிங், அகில் ஷியோரன் அடங்கிய இந்திய அணி, புள்ளிகளுடன் 1747.87 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
தனிநபர் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' ஜூனியர் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின்அட்ரியன் கர்மாகர் (463.8 புள்ளி) தங்கம் கைப்பற்றினார். மற்றொருஇந்தியவீரர் வேதாந்த் நிதின் (448.8) வெண்கலம் வென்றார்.
50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் வேதாந்த் நிதின் அட்ரியன், ரோகித் கன் யான் அடங்கிய இந்திய அணி, 1733.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
0
Leave a Reply