25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ரவா இடியாப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரவா இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:

வறுத்த அல்லது வறுக்காத வெள்ளை ரவை - 2கப்,

தண்ணீர் - 4கப்,

உப்பு தேவையான அளவு, 

தேங்காய் துருவல் – தேவையானஅளவு, 

சர்க்கரை – தேவையானஅளவு,

 இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ,

செய்முறை :

1கப் ரவைக்கு2கப் தண்ணீர் தான் அளவு.கடாயில்4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும்2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.

சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.

பின் கையில்1/2ஸ்பூன் எண்ணெய் தடவி1 நிமிடத்திற்கு மாவை(கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.

இட்லிகுக்கரில்2டம்ளர்தண்ணீர்விட்டுகொதிக்கவிடும்நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News