ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறும் சில்லு.
உங்கள் ஸ்மார்ட் போன், குறைந்த மின்சார செலவில், ஆயிரம் மடங்கு வேகமாக இயங்கி னால் எப்படி இருக்கும்? அமெரிக் காவின், எம்.ஐ.டி., நிலையத்தில்உள்ள பொறியாளர்கள், ஒருபுதியஏ.ஐ., செயலியைஉருவாக்கியுள்ளனர்.இது, தகவல்களை அலசவும், வெளியிடவும், எலக்ட்ரான்களை பயன்படுத்துவதில்லை.
மாறாக, ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறுகிறது. இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பின் எதிர்காலத்தை அடியோடு மாற்றிவிடும்.
இந்த 'ஆப்டிகல் நியூரல் நெட்வொர்க்' சில்லு, தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், அனுப் பவும் போட்டானிக் கூறுகளை பயன்படுத்துகிறது. இது, மனிதமூளையில் நியூரான்கள் செயல் படும் விதத்தை பிரதிபலிக்கிறது.
ஆனால் இந்த சில்லு, ஒளிக் கற்றைகள் மூலம் கணக்கீடுகளை செய்கிறது. இதன் விளைவாக, குறைந்த மின் செலவில், ஒளி வேகத்தில் இந்த சில்லு இயங்கும்.
இந்த சில்லு, '6ஜி' நெட்வொர்க் குகள், நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவிகள் மற்றும் அதிவேக நிதி அமைப்புகள் போன்ற தொழில்நுட் பங்களை செலுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேலும், ஒளியானது எலக்ட்ரான் களை விட வேகமாக, குறைந்த எதிர்ப்புடன் பயணம் செய்வதால்,முற்றிலும் புதிய கணினி கட்டமைப்புகளுக்கான கதவை திறக்கிறது.
0
Leave a Reply