போல்கி பார்டர், வின்டேஜ் ஸ்பினல்: பிளவுஸில் பழமையைப் புகுத்திய நீதாஅம்பானி.
நீதா அம்பானி வெறும் ஆடையை மட்டும் அணிவதில்லை.அதை ஒரு கலாச்சாரப் பிரகடனமாகவே மாற்றுகிறார். இந்த நிகழ்வுக்காக அவர் தேர்ந்தெடுத்த லுக், பாரம்பரியமும் நவீனமும் கைகோர்க்கும் ஒரு கலைப் படைப்பைப் போல இருந்தது.அம்பானி குடும்பத்தின் தலைவி நீதா அம்பானி, சமீபத்தில்'சுவதேஷ்'(Swadesh) முதன்மைஅங்காடியில் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்வில் அவர் அணிந்து வந்த உடைகளும், நகைகளும் இந்தியப் பாரம்பரிய ஆடம்பரத்தின் உச்சமாகத் திகழ்ந்தன. நீதா அம்பானி வெறும் ஆடையை மட்டும் அணிவதில்லை; அதை ஒரு கலாச்சாரப் பிரகடனமாகவே மாற்றுகிறார். இந்த நிகழ்வுக்காக அவர் தேர்ந்தெடுத்த லுக், பாரம்பரியமும் நவீனமும் கைகோர்க்கும் ஒரு கலைப் படைப்பைப் போல இருந்தது.
நீதா அம்பானி, மயிலிறகு நீல நிறத்தில் அமைந்திருந்த'சுவதேஷ்' கடையின் பனாரஸ் பட்டு சேலையை அணிந்திருந்தார். பாரம்பரிய'கட்வா நெசவு'(Kadhuaweavingtechnique) முறையில் நெய்யப்பட்ட இந்தச் சேலையில், நுணுக்கமான'மீனா' வேலைப்பாடுகள் இருந்தன. இதற்கு இணையாக, பிரத்யேகமாக மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த பிளவுஸை அவர் அணிந்திருந்தார்.இந்தப் பிளவுஸில் 'போல்கி'(Polki) கற்களால்ஆன பார்டர் இருந்தது. பிளவுஸில் உள்ள ஒவ்வொரு பட்டனும், பாரம்பரியக் கலைஞர்களால் வரையப்பட்ட, இந்து தெய்வங்களின் மினியேச்சர் ஓவியங்களாக(miniaturepainting) இருந்தன. பிளவுஸின் டேசல் பகுதியில், பழங்கால ஸ்பினல் கற்களால் ஆன ஆபரணம் தொங்கியது.
நீதா அம்பானியின் இந்த லுக், நகைகளில்தான் அதிகப் பாரம்பரியத்தைக் காட்டியது. இதுதான் அவரது ஆடம்பரத்தின் உச்சகட்ட நகர்வு என வர்ணிக்கப்படுகிறது: அவர் அணிந்திருந்த குந்தன் போல்கி(KundanPolki) காதணிகள்,100 ஆண்டுகளுக்கு முன் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட அரிய கலைப் படைப்பு. இந்தக் கம்மல்கள் இந்திய வரலாற்றின் பெருமையைப் பேசுவதாக அமைந்திருந்தன.நீதா அம்பானி, தன் தாயிடமிருந்து தலைமுறை தலைமுறையாக வந்த பரம்பரை'ஹாத் பூல்'(கையையும் விரல்களையும் இணைக்கும் நகை) அணிந்திருந்தார். உலகிலேயே விலை மதிப்புமிக்க செல்வம் இருந்தாலும், சில பொக்கிஷங்களை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்பதை இது நினைவுபடுத்தியது.
மேலும்,'ஜடாவ்'(Jadau) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, போல்கி வைரங்கள் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட பறவையின் உருவம்கொண்ட மோதிரம் ஒன்றையும் அவர் அணிந்திருந்தார். பழைய காலப் பாரம்பரியத்தையும், தற்காலப் ஃபேஷனையும் அவர் இணைத்துப் பயன்படுத்தியது, அவரது தனிப்பட்ட ரசனையையும், இந்தியாவின் கலை பாரம்பரியத்தின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தியது.
0
Leave a Reply